Latestமலேசியா

தாப்பா- கேமரன்மலை உள்பட பல தொகுதிகளில் தேர்தல் வழக்கு!

கோலாலம்பூர், ஜூன் 14 – பிரிபுமி பெர்சத்துக் கட்சியைச் சேர்ந்த 14 வேட்பாளர்கள் தேர்தல் முடிவுகளை எதிர்த்து வழக்குத் தாக்கல் செய்துள்ளனர். குறிப்பிட்ட தங்களது தொகுதிகளில் இடைத்தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நேர்மையான முறையில் வாக்கெடுப்பு நடத்தப்படுவது மீதான அடிப்படை விதிமுறைகள் மீறப்பட்டுள்ளன. மேலும் தங்களை எதிர்த்துப் போட்டியிட்டவர்கள் பல்வேறு தேர்தல் குற்றங்களைப் புரிந்துள்ளனர் என்று அந்த 14 வேட்பாளர்களும் கூறியுள்ளனர்.

கடந்த மே 9 ஆம் தேதி நடந்த பொதுத்தேர்தலில் சட்டமன்ற மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களில் தோல்விகண்ட பிரிபுமி பெர்சத்து வேட்பாளர்கள் 7 தேர்தல் வழக்குகளைத் தொடுத்துள்ளார்.

இந்த வேட்பாளர்கள் தங்களது தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்தப்பட்ட வேண்டும் என்று வழக்கு மனுவில் கோரியுள்ளனர் என்று பெர்சத்து கட்சியின் சட்டப் பிரிவுச் செயலாளர் மியோர் நோர் ஹைடிர் கூறினார்.

தாசெக் குளுக்கோர் (பினாங்கு) ஜெம்போல் (நெகிரி செம்பிலான்) தாப்பா மற்றும் பகான் செராய் (பேரா) ஆகிய நாடாளுமன்றத் தொகுதிகளின் தேர்தல்கள் இப்போது வழக்கைச் சந்தித்துள்ளன. லுபோக் பெர்பாவ், சாங்காட் ஜோங் (பேரா) மற்றும் கஹாங் (ஜொகூர்) ஆகிய சட்டமன்ற தேர்தல்களை எதிர்த்தும் வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே ஆயர் ஈத்தாம் நாடாளுமன்றத் தொகுதியில் தாசெக் வேட்பாளர் லியு சின் தோங் தம்முடைய தோல்வியை எதிர்த்து வழக்குத் தாக்கல் செய்துள்ளார். இவர் டத்தோஶ்ரீ வீ கா சியோங்கிடம் 303 வாக்குகளில் தோல்வி கண்டார்.

வாக்குகள் விலைக்கு வாங்கப்பட்டதாக கூறிய கேமரன்மலை நாடாளுமன்றத் தொகுதியின் ஐசெக வேட்பாளர் எம்.மனோகரன் வழக்குத் தொடுத்துள்ளார். இங்கு மனோகரனின் 597 வாக்குகள் வித்தியாசத்தில் தே.மு. வேட்பாளர் சிவராஜ் வென்றார்.

Tags
Show More

Related Articles

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker