Latestஇந்தியா

தீபிகா படுகோனின் அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ

மும்பை, ஜூன்.14-பிரபல போலிவுட் நடிகை தீபிகா படுகோன் குடியிருக்கும் ஆடம்பர அடுக்குமாடியில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

மும்பையிலுள்ள பியூமோண்ட் டவஸ் 34 தளங்கள் கொண்ட அடுக்கு மாடிக் கட்டடத்தில் தீபிகா படுகோனின் வீடும் அலுவலகமும் உள்ளன.
தீ விபத்து ஏற்பட்ட போது அவர் வீட்டில் இல்லை என்றும் அவரது வீட்டுக்கும் அலுவலகத்திற்கும் எவ்வித பாதிப்பும் இல்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அந்தக் கட்டடத்தில் வசிக்கும் 90க்கும் மேற்பட்டவர்கள் பாதுகாப்பான முறையில் வெளியேற்றப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில் தானும் பாதுகாப்பாக இருப்பதாகவும் அந்தக் கட்டடத்தில் தீயணைப்புப் பணியிலிருக்கும் வீரர்களுக்காக பிரார்த்தனை செய்யுமாறு தீபிகா படுகோன் தனது டுவிட்டர் மூலம் ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கட்டடத்தின் 33 ஆவது தளத்தில் மதியம் சுமார் 2 மணியளவில் தீப்பற்றியது. தீப்பற்றியதற்கான காரணம் இதுவரை கண்டுப் பிடிக்கப்படவில்லை.

Tags
Show More

Related Articles

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker