Latestசினிமா

நடிகை நளினியை பசுமாடு என்பதா? நடிகர் மீது போலீஸ் புகார்

சென்னை, ஜூன்.14- நடிகை நளினியை பசுமாட்டுடன் ஒப்பிட்டார் நடிகர் கார்த்திக் குமார். இது ஒரு வகை பகடி. நகைச்சுவை என்கிற பெயரில் பெண்களுக்கு எதிராக வன்கொடுமைச் செயலாகும் என போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.

பிரபல நடிகர் ராமராஜன், 80-களில் முன்னணி நடிகையாக இருந்த பிரபல நடிகை நளினியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர்.

இந்நிலையில் “அமேசான் பிரமிட் பிளட் சட்னி” என்ற பெயரில் ஒளிபரப்பான காமெடி நிகழ்ச்யில் காமெடி .செய்த நடிகர் கார்த்திக் குமார், நடிகர் ராமராஜன் நிச்சயம் ஒரு பசுமாட்டை வைத்திருப்பார் என்றும் ஆனால் நான் அவரது மனைவி நளினியை குறிப்பிடவில்லை என்று கூறியிருந்தார்.

இதன் மூலம் நடிகர் கார்த்திக் குமார் பெண்களை அவமானப் படுத்துவதாக குற்றஞ்சாட்டி, ஜெனிபர் ஜேக்கப் என்பவர் இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை மாநகர காவல் ஆணையருக்கும் -மகளிர் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகத்துக்கும் மின்னஞ்சல் மூலம் புகார் கடிதம் அனுப்பியுள்ளார்.

இது போன்ற நிகழ்வுகள் தொடர்ந்தால் நகைச்சுவை என்கிற பெயரில் பெண்கள் மீதான வன்கொடுமைகள் அதிகரிக்கும் என்று ஜெனிபர் ஜேக்கப் தனது புகார் மனுவில் கூறியுள்ளார், போலீசார் இது குறித்த விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker