Latestமலேசியா

பக்காத்தானுக்கு ஆதரவு: 95% சீனர்கள்! 30% மலாய்க்காரர்கள்! 75% இந்தியர்கள்!

கோலாலம்பூர், ஜூன்.14- கடந்த மே மாதம் 9-ஆம் தேதியன்று நடைபெற்ற பொதுத் தேர்தலின் போது, 95 விழுக்காடு சீனர்கள் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணிக்கு வாக்களித்துள்ளனர் என்று தி ஸ்ட்ரேய்ட் டைம்ஸ் தெரிவித்துள்ளது.

கடந்த 2013-ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில், 85% சீனர்கள் தான் எதிர்கட்சியான பக்காத்தான் ராக்யாட் கூட்டணிக்கு வாக்களித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இருந்த போதிலும், நாட்டின் 14-ஆவது பொதுத் தேர்தலில், 25 விழுக்காட்டிலிருந்து 30 விழுக்காடு மலாய்க்காரர்கள் தான் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணிக்கு வாக்களித்துள்ளனர் என்று மெர்டேக்கா செண்டரின் ஆய்வின் வாயிலாக தெரிய வந்துள்ளது.

35 விழுக்காட்டிலிருந்து 40 விழுக்காடு மலாய்க்காரர்கள் தேசிய முன்னணி கூட்டணிக்கு வாக்களித்துள்ளனர். மேலும் 30 விழுக்காடிலிருந்து 33 விழுக்காடு மலாய்க்காரர்கள் பாஸ் கட்சிக்கு வாக்களித்துள்ளனர்.

ஜொகூர், மலாக்கா மற்றும் நெகிரி செம்பிலான் ஆகிய மாநிலங்களில் உள்ள மலாய்க்கார்ர்கள் பக்காத்தான் கூட்டணிக்கு தான் பெருமளவில் வாக்களித்துள்ளனர்.

இருந்த போதிலும், கிளந்தான் மற்றும் திரெங்கானு மாநிலங்களில் வாக்களித்த மலாய் வாக்காளர்கள், தேசிய முன்னணி மற்றும் பாஸ் கட்சிகளுக்கு வாக்களித்த காரணத்தால், பக்காத்தானுக்கு வாக்களித்த மலாய் சமூகத்தினரின் எண்ணிக்கை சரிவு கண்டது.

70 விழுக்காட்டிலிருந்து 75 விழுக்காடு இந்தியர்கள், பக்காத்தான் கூட்டணிக்கு வாக்களித்துள்ளனர் என்று அந்த ஆய்வறிக்கை தெளிவுப் படுத்தியுள்ளது.

மலாய் சமூகத்தினரின் வாக்குகள் பிளவுப் பட்டிருப்பதால், எதிர்வரும் பொதுத் தேர்தலில், பக்காத்தான், தேசிய முன்னணி மற்றும் பாஸ் கட்சிகளுக்கு இடையில் கடுமையான போட்டி நிகழலாம் என்று அந்த ஆய்வறிக்கை கூறியுள்ளது.

முன்னாள் தேசிய முன்னணி தலைவரான டத்தோஶ்ரீ நஜிப் ரசாக்கின் தலைமைத்துவம் மற்றும் பொருள் சேவை வரியால் அதிருப்தி அடைந்த போதிலும், பக்காத்தான் கூட்டணியை நம்பாத காரணத்தால், பல தேசிய முன்னணி ஆதரவாளர்கள், அக்கட்சிக்கே தொடர்ந்து வாக்களித்துள்ளனர் என்று மெர்டேக்கா செண்டரின் ஆய்வு நிர்வாகி டான் செங் கியாட் கூறினார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker