Latestமலேசியா

புதிய அமைச்சர்கள் : ஜூன் 20-ஆம் தேதி அறிவிப்பா?

கோலாலம்பூர், ஜூன்.14- புதிய அமைச்சர்களின் பெயர் பட்டியல் ஜூன் 20-ஆம் தேதி அறிவிக்கப்படலாம். அதனால், அதற்குள்  அமைச்சரவை குறித்து ஊடகங்கள் ஆருடங்களை வெளியிட வேண்டாம் என பி.கே.ஆர் உதவித் தலைவர் தியான் சுவா கேட்டுக்கொணடார்.

“பிரதமர் துன் மகாதீர் தற்போது ஜப்பானில் இருக்கிறார். மேலும் ஹரி ராயா விடுமுறை வேறு. அதனால், அமைச்சரவை விரிவாக்கப் பட்டியலை அறிவிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது” என அவர் குறிப்பிட்டார்.

இதனிடையே, அந்த அமைச்சரவைப் பட்டியலில் அவர் இருக்கிறாரா என்று கேட்டதற்கு, “இல்லை, நான் நாடாளுமன்ற உறுப்பினர் கிடையாது” என்றார் அவர்.

பொதுத் தேர்தலில் தே.மு-வை வீழ்த்தி இரண்டு வாரங்களுக்கு பிறகே,  பக்காத்தான் ஹராப்பானின் முக்கிய அமைச்சர்கள் கடந்த மே 21-ஆம் தேதி பதவி உறுதி மொழி எடுத்துக் கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags
Show More

Related Articles

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker