Latestமலேசியா

புத்ராஜெயாவில் மீண்டும் மகாதீரின் திறந்த இல்ல விருந்துபசரிப்பு!

கோலாலம்பூர், ஜூன்.14 – பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் மற்றும் அவரது துணைவியார் துன் டாக்டர் சித்தி ஹஸ்மாவும் அவர்களுக்கு மிகவும் பரிட்சயமான நோன்பு பெருநாள் திறந்த இல்ல உபசரிப்பை நடத்தவுள்ளனர்.

திறந்த இல்ல விருந்துபசரிப்பு பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லமான ஶ்ரீ பெர்டானாவில் நாளை காலை 10 மணி முதல் மதியம் 4.30 மணி வரை நடைபெறும்.

பிரதமருக்கும் அவரது துணைவியாருக்கும் நோன்பு பெருநாள் வாழ்த்துக்களை தெரிவிக்கும் அதே வேளையில் கடந்த 14-ஆவது பொதுத்தேர்தலில் மகத்தான வெற்றி பெற்றதற்கு தங்களது வாழ்த்துகளை தெரிவிக்கவும் பலர் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்வர் என எதிர்பார்க்கப் படுகிறது.

மகாதீர் கடந்த 2003ஆம் ஆண்டு பிரதமராக பதவியேற்ற பின்னர் ஸ்ரீ கேம்பாங்கானில் உள்ள அவரது இல்லத்தில் ஒவ்வொரு ஆண்டும் திறந்த இல்ல விருந்துபசரிப்பு நடத்துவதை வழக்கமாகக் கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், உள்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் டான்ஸ்ரீ மொகிடின் யாசினின் திறந்த இல்ல விருந்துபசரிப்பு ஜொகூரில் உள்ள பாகோ விளையாட்டு வளாகத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணி முதல் மதியம் 1.30 மணி வரையும் திங்கட்கிழமை காலை மணி 10 முதல் மதியம் 1 மணி வரை புக்கிட் காம்பிர் பல்நோக்கு மண்டபத்திலும் நடைபெறும்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker