Latestமலேசியா

மாணவனை குத்திய போலீஸ் அதிகாரிக்கு எதிராக விசாரணை! 

ஈப்போ, ஜூன்.14 – கடந்த செவ்வாய்க்கிழமை சுங்கை சிப்புட் மருத்துவமனை அருகே சாலை சமிக்ஞை விளக்கில் நிற்காமல் சென்ற மாணவனை குத்தியதாக போலீஸ் அதிகாரி ஒருவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.

அதைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட மாணவனின் புகாரின் பேரில் அந்த போலீஸ் அதிகாரிக்கு எதிராக விசாரணை தொடங்கப்பட்டது.

“சாலை சமிக்ஞை விளக்கு சிவப்பு நிறத்தைக் காட்டிய போதும் காரை நிறுத்தாமல் சென்ற அம்மாணவனை போலீசார் துரத்திச் சென்று இடைமறித்தனர்,” என பேராக் குற்றப்புலனாய்வுத் துறை தலைவர்  யாஹ்யா அப்துல் ரஹ்மான் தெரிவித்தார்.

காரின் கதவைத் திறந்ததும் போலீசாரில் ஒருவர் தன்னை குத்தியதோடு அறைந்ததாகவும் சம்பந்தப்பட்ட மாணவன் கூறியதாக அவர் குறிப்பிட்டார்.

அதோடு, 23 வயது மாணவன் செமோர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டதோடு சாலை விதிகளை மீறியதால் அவருக்கு சம்மனும் வழங்கப்பட்டது. போலீஸ் இந்த வழக்கை குற்றவியல் சட்டத்தின் பிரிவு 323-இன் கீழ் பதிவு செய்துள்ளது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker