Latestமலேசியா

ரிம.1 டிரில்லியனா? நஜிப்புக்கு பதில் சொல்வது நேர விரயம்- லிம் குவான் எங்

கோலாலம்பூர், ஜூன்.14- நாட்டின் கடன் சுமை குறித்த உண்மைகளுக்கு நஜிப் தொடர்ந்து எதிர்ப்புக் குரல் கொடுத்து நேரத்தை தான் வீணடித்து வருகிறார் என நிதி அமைச்சர் லிம் குவான் எங் கருத்துரைத்துள்ளார்.

நாட்டின் கடன் ரிம.687 பில்லியன் அதாவது நாட்டின் மொத்த உற்பத்தியில் இருந்து 50.8 விழுக்காடு மட்டுமே என நஜிப் விவாதம் புரிந்து வருகிறார்.

“நாடு பட்ட கடன் என்னவோ தர மதிப்பீட்டு நிறுவனம் மூடி’ஸ் கூறியிருப்பது போல 50.8 விழுக்காடுதான். ஆனால், தே.மு அரசு ஏற்படுத்திச் சென்றுள்ள மற்ற கடன்களை எந்த கணக்கில் சேர்ப்பது? 1எம்டிபி கடனை யார் அடைப்பது? இப்படி தே.மு அரசு விட்டுச் சென்ற கடன்கள் அனைத்தையும் சேர்த்துதான் 1 டிரில்லியன் ரிங்கிட் என்று சொல்கிறோம். எல்லாம் தெரிந்தும் நஜிப் என்ன முழு பூசணிக்காயை சோற்றில் மறைத்து பேசுகிறாரா? என்று லிம் குவான் எங் கேள்வி எழுப்பியுள்ளார்.

“நாட்டின் கடன் ரிம.1 டிரில்லியன் இல்லை; அது பொய்” என நஜிப் நேற்று வெளியிட்ட கூற்றுக்கு, லிம் குவான் இவ்வாறு பதிலடி கொடுத்துள்ளார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker