Latestமலேசியா

ஹரி ராயாதான்; ஆனால் ஓய்வெடுக்க முடியாது – துன் மகாதீர் – (video)

கோலாலம்பூர், ஜூன்.14- விடிந்தால் ஹரி ராயா. ஆனால், துன் மகாதீர் வீட்டுக்குச் செல்லாமல் இன்னும் பம்பரமாகச் சுழன்று கொண்டிருக்கிறார். செய்வதற்கு நிறைய வேலை இருப்பதாக அவர் கூறியுள்ளார்.

“இன்று நோன்பு மாதத்தின் இறுதி நாள். நாளை ஹரி ராயா. ஆனால், எனக்கு வேலை ஓய்ந்த பாடில்லை. நான் ஓய்வெடுக்க முடியாது” என தமது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள காணொளியில் துன் மகாதீர் தெரிவித்துள்ளார்.

வேலை பரபரப்பிலும் நாட்டு மக்களுக்காக சொல்ல அவருக்கு முக்கியமான விஷயங்கள் உள்ளது போலும். அதனால் என்னவோ அந்த காணொளியில் துன் மகாதீர் பலவற்றைப் பேசி இருக்கிறார்.

“பெருநாளை ஒன்றாகக் கொண்டாட உங்கள் குடும்பத்தார் உங்களுக்காக காத்திருப்பார்கள். அவசரம் வேண்டாம். பத்திரமாக வீடு போய் சேருங்கள். குடும்பத்தாரை கலங்க வைத்து விடாதீர்கள்” என சொந்த ஊர்களுக்குச் செல்லும் அன்பர்களுக்கு அவர் அறிவுறுத்தியுள்ளார்.

மேலும், பெருநாளின் போது அளவுக்கு மீறி உண்ண வேண்டாம் என்றும், பட்டாசுகள் விளையாட வேண்டாம் எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதனிடையே, தமக்கு பிடித்த ஹரி ஹாரா விஷயங்களை துன் மகாதீர் அந்த காணொளியில் பகிர்ந்து கொண்டுள்ளார்:

பிடித்த பலகாரம் : ” குவே மக்மோர். அது இனிப்பாக இருக்கும். ஆனால், இப்போது குறைந்த இனிப்புடந்தான் சாப்பிடுகிறேன்.”
பிடித்த ராயா பாடல் : “சுடீர்மானின் செலமாட் ஹரி ராயா.”
பிடித்த ராயா சட்டை நிறம் : “ஊதா”
பிடித்த ராயா தருணம் : “தொழுகை முடிந்து வந்ததும் வீட்டில் ஒட்டு மொத்த குடும்பமே இருக்கும். ஒன்றாக ராயா கொண்டுவோமே அது பிடிக்கும்.”

Tags
Show More

Related Articles

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker