Latestமலேசியா

‘அரச ஆட்சி அமைப்பு முறையை சாதாரணமாக கருதாதீர்!’-மாமன்னர்

கோலாலம்பூர், ஜூன்.15-அரச ஆட்சி முறையை குறிப்பாக, அரசியல் அமைப்புச் சட்ட ரீதியிலான மன்னராட்சி முறையில் மாமன்னரின் நிலையை சாதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என்று மலேசியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

மலேசியர்கள் இதனைக் கவனத்தில் கொள்ளவேண்டும். ஏனெனில், மன்னாராட்சி அமைப்பு முறை என்பது கூட்டரசு அரசியல் சட்டத்திலேயே மிகத் தெளிவாக அங்கீரிக்கப்பட்டுள்ளது என்று மாமன்னரான சுல்தான் ஐந்தாம் முகம்மட் தெரிவித்துள்ளார்.

எனவே, இந்த விவகாரத்தை எல்லா தரப்பினரும் கவனத்தில் வைத்துக் கொள்ளவேண்டும். மேற்கத்திய கலாசாரத்தைக் கடைபிடிக்க முயல வேண்டாம். மேற்கத்தியர்களின் நடவடிக்கைகள், நாட்டுக்கு நன்மை அளிக்குமா, தீமை அளிக்குமா? என்பது பற்றிக் கவலைப்படாமல், உணர்ச்சிகளின் அடிப்படையில் தான் அமைந்திருக்கும் என்று மாமன்னர் சுட்டிக்காட்டினார்.

மாமன்னர் அரச முறை என்பது ஓர் அடையாளமாக மட்டும் கருதிவிட முடியாது. அது மிகப்பெரிய பொறுப்பினைக் கொண்டது. குறிப்பாக, நெருக்கடியான காலக்கட்டத்தில், மக்களுக்கோ,, நாட்டுக்ககோ ஆபத்து ஏற்படாமல், நிலைமையைச் சமன்படுத்துவதில் மாமன்னரின் பொறுப்பு மிக முக்கியத்துவம் வாய்ந்தது என்று அவர் விளக்கினார்.

ஹரிராயா பெருநாளை முன்னிட்டு ஆர்டிஎம் வழி, நாட்டு மக்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவிக்கும் தருணத்தில் மேற்கண்ட அம்சத்தை மாமன்னர் சுட்டிக்காட்டினார்.

அனைத்து முஸ்லிம் மக்களுக்கும் தம்முடைய வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்ட மாமன்னர், நோன்புப் பெருநாள் கொண்டாட்டத்தின் போது ஒருவரை ஒருவர் மன்னித்துக் கொள்ளும் வகையில் கைகுலுக்கி, தங்களின் ஒற்றுமை மற்றும் நல்லெண்ணத்தை மலேசியர்கள் அனைவரும் கட்டிக்காக்க வேண்டும் என்று மாமன்னர் கேட்டுக்கொண்டார்.

 

s

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker