Latestமலேசியா

கைத்தொலைபேசி வெடித்ததால் நிறுவன அதிபர் நஸ்ரின் மாண்டார்!

பெட்டாலிங் ஜெயா, ஜூன்.15 – வீட்டின் அறை தீப்பற்றியதில் மூச்சுத் திணறி உயிரிழந்ததாக கூறப்பட்ட போதிலும், கைத்தொலைபேசி வெடித்ததால் ‘கிரேடல்’ நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி நஸ்ரின் ஹசான் இறந்துள்ளார் தற்போது தெரிய வந்துள்ளது.

அவரது படுக்கைக்கு அருகிலிருந்த கைத்தொலைபேசி சார்ஜரில் இருந்த போது வெடித்துள்ளது. அதன் சிதறிய பாகம் அவரது தலையில் பாய்ந்துள்ளது. அதே வேளையில் அவரது படுக்கை அறை தீப்பற்றி எரிந்ததால் அவர் தீயில் கருக நேர்ந்துள்ளது என்று அவரது பிரேத பரிசோதனையில் இருந்து தெரிய வந்துள்ளது.
திடீர் மரணத்தால் தொடக்க நிறுவனங்கள் அதிர்ச்சியில் உரைந்துள்ளன.

அவர் தொடக்க நிறுவனங்களுக்கு ஆரம்ப கட்ட நிதி வழங்கும் கிரேடல் முதலீட்டு திட்டத்தை நிர்வகிக்கும் நிதி அமைச்சக நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஆவார். அதோடு, Grab, MyTeksi,மற்றும் iMoney போன்ற பல வெற்றிபெற்ற நிறுவனங்களின் திறனைக் கண்டறிந்து அவற்றை தொடங்குவதற்கு முதலில் நிதி வழங்கியது இவரது கிரேடல் நிறுவனமே ஆகும்.

இதனிடையே, தனது கிரேடல் நிறுவனத்தின் மூலம் பல நிறுவனங்களுக்கு வழிகாட்டிய நஸ்ரினின் மரணத்திற்கு பிரபலங்கள், நண்பர்கள் என பலரும் தங்களது இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.

“நேர்மையான, கண்ணியமான, மற்றவர்கள் மேல் அக்கறைக் கொண்ட ஒரு நல்ல மனிதர் இறந்து விட்டார். இது அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் மட்டுமல்லாது நாட்டிற்கும் பெரும் இழப்பாகும்,” என ‘ப்ரோபிசியோ” ஆலோசனை நிறுவனத்தின் இணை நிறுவனர் தலைமை டாக்டர் சிவபாலன் தெரிவித்தார்.

தொழில் முனைவோர் நிதி பெறும் நிறுவனமாக மட்டுமல்லாமல் அவர்களின் வியாபாரத்தை எப்படி அடுத்த நிலைக்கு கொண்டு வருவது என்பதை கற்றுக் கொள்ளும் ஓர் இடமாகவும் இருந்த கிரேடலை புதிதாக உருமாற்றும் வழிகளைப் பற்றி நஸ்ரின் எப்போதும் யோசித்துக் கொண்டிருந்தார் என கருத்துரைத்தார்.

நேற்று மதியம் ஒற்றை தலைவலி காரணமாக மருந்து உட்கொண்ட பின்னர் சிறிது நேரம் உறங்கக் சென்ற நஸ்ரினின் அறையிலிருந்த படுக்கை தீப்பற்றியதால் அவர் மூச்சுத் திணறி இறந்தார் என முன்பு வெளிவந்த தகவல்கள் கூறின.

 

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker