Latestமலேசியா

நாம் அனுபவிக்கும் ஜனநாயகம்: நன்றியோடு பாருங்கள்! -மகாதீர்

கோலாலம்பூர், ஜூன்.15- இப்போது நாம் அனுபவித்து வரும் ஜனநாயக த்திற்காக மலேசியர்கள் எப்போதும் நன்றிக்கடன் பட்டவர்களாக இருக்கவேண்டும் என்று ஹரிராயா வாழ்த்துரையில் பிரதமர் துன் மகாதீர் வலியுறுத்தினார்.

உலகின் பல பகுதிகளில் முஸ்லிம் சகோதர்கள், தாங்கள் விரும்பிய ஜனநாயகம், கடைசி வரை முறையாக அமையாமல், செயல்படாமல் போயிருப்பதை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும் என்று அவர் சொன்னார்.

ஆனால், அதேவேளையில் மலேசியாவில் நாம் இன்னமும் ரம்டானை அனுஷ்டிக்க முடிகிறது. ஹரி ராயாவை மகிழ்ச்சியாகவும் நிம்மதியாகவும் எதிரிகளின் தாக்ககுதல் பயம் எதுவுமின்றியும் கொண்டாட முடிகிறது என்று அவர் சொன்னார்.

நாம் இப்போது எதிர்கொண்டிருக்கும் நமது சவாலகளையும் எதிர்பார்ப்புகளையும் கவனமாக சிந்தித்து, எப்படி ஆவற்றைச் சமாளிக்கப் போகிறோம் என்பதை ஆலோசிப்போம்.

நம்முடைய முயற்சிகளும் மனம் தளராத போராட்ட உணர்வும் கடவுளின் கருணையை நமக்குப் பெற்றுத்தரும். அனைத்து தடைகளையும் நாம் வென்று முன்னேறுவோம் என்று தொலைக்காட்சியில் ஹரிராயாவை முன்னிட்டு மக்களுக்கு வழங்கிய வாழ்த்து உரையில் பிரதமர் துன் மகாதீர் குறிப்பிட்டார்.

 

K

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker