Latestமலேசியா

பட்டாசுக் கடையில் தீ!  இருவர் காயம்! -(VIDEO)

பஹாவ், ஜூன்.15 – நெகிரி செம்பிலான், பஹாவ் நகரில், ஜாலான் மாளிகையில் உள்ள வங்கி முன்பு போடப்பட்டிருந்த பட்டாசு கடை தீப்பிடித்து பட்டாசுகள் வெடித்துச் சிதறியதால் பெரும் அமளி ஏற்பட்டது. இந்தச் சம்பவத்தில் இருவர் காயமடைந்தனர்.

நோன்பு பெருநாளை முன்னிட்டு கடைசி நேர ‘ஷாப்பிங்’ செய்துக் கொண்டிருந்த சிலர் வெடிப்பு சத்தம் கேட்டுஅதிர்ச்சியடைந்தனர். நேற்று இரவு 10 மணி அளவில் நடந்த அச்சம்பவத்தில் தீ வேகமாகப் பரவியதில் அனைத்துப் பட்டாசுகளும் அழிந்தன என தீவிபத்தை நேரில் கண்ட ஒருவர் தெரிவித்தார்.

“அத்தீவிபத்தில் வங்கியின் ஐந்து அடி நடைபாதையில் உள்ள அடிக்கூரை சேதமடைந்ததோடு பட்டாசு கடை முற்றிலும் அழிந்தது,” என அவர் கூறினார்.

அதோடு, தகவல் கிடைத்த சில நிமிடங்களில் சம்பவ இடத்திற்கு வந்தடைந்த தீயணைப்பு மற்றும் மீட்புப்படை உறுப்பினர்கள் தீயை கட்டுக்கோப்பில் கொண்டு வந்தனர்.

மேலும், சம்பவ இடத்திற்கு அருகே இருந்த வேனில் பட்டாசுகள் இருப்பதைக் கண்டறிந்த போலீசார் சந்தேகநபர் ஒருவரை கைது செய்தனர் என தெரியவந்துள்ளது. இத்தீவிபத்தின் காரணம் இன்னமும் விசாரணை செய்யப்பட்டு வருகிறது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker