Latestமலேசியா

மக்களவை சபாநாயகராக, ஒரு பெண்மணியா? -குலசேகரன்

கோலாலம்பூர், ஜூன்.15- மலேசியாவின் மக்களவை சபாநாயகராக ஒரு பெண்மணி தேர்ந்தெடுக்கப் படக்கூடிய வாய்ப்பு இருப்பதாக மனித வள அமைச்சர் எம்.குலசேகரன் கோடி காட்டியுள்ளார்.

ஜுலைமாதம் 16ஆம் தேதி நாடாளுமன்றம் கூடவிருக்கிறது. அன்றைய தினம் சபாநாயகர் தேர்வு செய்யப்படுவார். மறுநாள் முறையாக நாடாளுமன்ற கூட்டம் தொடங்கும்.

எனினும், செப்புத்தே தொகுதி எம்பியான திரேசா கோக் அல்லது சிகாம்புட் எம்பியான ஹன்னா இயோ ஆகியோரில் ஒருவர் சபாநாயகராக தேர்வு பெறக்கூடும் என்று வெளியான ஊடகத் தகவலை அமைச்சர் குலசேகரன் மறூத்தார்.

நாடாளுமன்றத்தில் அவ்வப்போது பெண்களுக்கு எதிராக வெளியிடப்படும் ஆபாசம் தொனிக்கும் பேச்சுக்களைக் கவனத்தில் கொண்டு அவற்றைத் தவிர்க்க, சபாநாயகராக பெண்மணி ஒருவர் நியமிக்கப்பட வேண்டும் என்று பெண் எம்.பி.கள் கோரி வருகின்றானர்.

இதனிடையே, சீன தினசரி ஒன்றுக்கு அளித்த பேட்டியில், வறுமைக் கோட்டில் இருக்கும் ‘பி-40’ மக்களின் நன்மைக்காக தாம் தொடர்ந்து போராடவிருப்பதாக குலசேகரன் குறிப்பிட்டார்.

சுமார் 3,900 ரிங்கிட்டிற்கும் குறைவான குடும்ப வருமானத்தைக் கொண்ட 40 விழுக்காடு குடும்பங்களையே இந்த ‘பி-40’ என்ற குறியீடு சுட்டிக்காட்டுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags
Show More

Related Articles

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker