Latestமலேசியா

யார் புதிய சிலாங்கூர் மந்திரி புசார்? ஜுன் 18 – இல் அறிவிப்பு!

லாலம்பூர், ஜூன்.15 – ஜூன் 19-இல் கிள்ளானில் உள்ள இஸ்தானா அலாம் ஷாவில் நடைபெறவிருக்கும் புதிய சிலாங்கூர் மந்திரி புசாரின் நியமனத்திற்கு ஒரு நாளுக்கு முன்னர் அதாவது வரும் திங்கள்கிழமை யார் அப்பதவியை நிரப்புவார் என்பது அறிவிக்கப்படும் என நம்பப்படுகிறது.

“தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் பதவியேற்பு விழாவிற்கு முன் நடைபெறும் ஒத்திகையில் கலந்துக் கொள்வார். நோன்பு பெருநாள் விடுமுறைக்கு பின்னர் அவர் யார் என்பது நமக்குத் தெரிந்துவிடும்,” என பெயர் வெளியிட விரும்பாத பக்காத்தான் ஹராப்பான் சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.

அதோடு, ஈஜோக் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் இட்ரிஸ் அகமட் அல்லது சுங்கை துவா சட்டமன்ற உறுப்பினர் அமிருடின் ஷாரி ஆகிய இருவரில் ஒருவர் அவ்விடத்தை நிரப்புவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், அனைத்து ஆட்சிக்குழு உறுப்பினர்களும் புதிய சிலாங்கூர் மந்திரி புசாரின் பதவியேற்பு விழாவிற்காக அரண்மனையின் அழைப்பை பெற்றனர் என மற்றொரு சட்டமன்ற உறுப்பினர் கருத்துரைத்தார்.

டத்தோஶ்ரீ அஸ்மின் அலி பொருளாதார விவகார அமைச்சராக நியமிக்கப்பட்டது முதல் யார் சிலாங்கூர் மந்திரி புசாராக நியமிக்கப்படுவார் என பல்வேறு ஊகங்கள் நிலவுகின்றன.

சிலாங்கூர் மந்திரி புசார் பொறுப்புக்கு பொருத்தமானவர் அடையாளம் காணப்பட்டு சுல்தானின் ஒப்புதலோடு அவரிடம் பொறுப்பை ஒப்படைக்கும் வரையில் அஸ்மின் அலி சிலாங்கூர் மந்திரி புசார் பதவியில் இருப்பார் என்பது குறிப்பிடதக்கது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker