Latestமலேசியா

ஹரி ராயா உபசரிப்பு; மக்களைக் கண்டேன்; மனம் நெகிழ்ந்தேன்! -மகாதீர்

புத்ராஜெயா, ஜூன்,15- “ஹரி ராயா பெருநாளை முன்னிட்டு நடத்தப்பட்ட திறந்த இல்ல உபசரிப்புக்கு வந்திருந்த மலேசியர்கள் ஒவ்வொருவரையும் நான் முன்நின்று வரவேற்க இயலாமல் போய்விட்டது. ஆனாலும் பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டு வந்திருந்தது என் மனதை நெகிழ வைத்து விட்டது” என்று பிரதமர் துன் மகாதீர் கூறினார்

.புத்ராஜெயாவில் பிரதமர் துன் மகாதீர் தமது இல்லத்தில் இன்று அளித்த திறந்த இல்ல உபசரிப்புக்கு, ஐம்பது ஆயிரத்திற்கும் கூடுதலான மலேசியர்கள் வருகை அளித்திருந்தனர்.

PUTRAJAYA, 15 Jun — Perdana Menteri Tun Dr Mahathir Mohamad bersama isteri Tun Dr Siti Hasmah Mohamad Ali melambaikan tangan ke arah orang ramai yang hadir pada Majlis Rumah Terbuka Hari Raya Aidilfitri Perdana Menteri dan Jemaah Menteri di Seri Perdana hari ini.
–fotoBERNAMA (2018) HAK CIPTA TERPELIHARA

இது விருந்துக்காக வந்தவர்களை காட்டிலும் மகாதீரை காண்பதற்காக வந்தவர்களே அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. தமக்கு பிடித்த ஊதா நிற மலாய் உடையில் துன் மகாதீர் இருந்தார்.

பிரதமராக பதவி ஏற்றது முதல் இதுவரை ஓய்வில்லாமல் நாட்டுக்காக உழைத்த களைப்பு சிறிதும் இல்லாமல், துன் மகாதீர் முகம் மலர மக்களைச் சந்தித்தார். 15 ஆண்டுகளுக்கு பிறகு துன் மகாதீர் மீண்டும் பிரதமராக புத்ராஜெயாவில் ஹரி ராயா கொண்டாடுகிறார்.

“மக்கள் காட்டிய ஆர்வம் கண்டு பிரமித்துப் போனேன். ஒவ்வொருவரையும் வரவேற்க இயலாமல் போனதற்காக மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். மலாய் பாரம்பரிய உடையணிந்து, பல இன மக்களும் திரண்டு வந்திருந்தது என்னை நெகிழ வைத்தது.
மலேசியர்களின் பல இனக் கலாசாரம் ஒட்டுமொத்தமாக வெளிப்பட்டது. நாட்டின் எதிர்காலத்தைக் குறிக்கும் ஒரு நல்ல அடையாளமாக இந்த விருந்து அமைந்தது” என்று துன் மகாதீர் சொன்னார்.

“நாங்கள் பிரதமரை நேசிக்கிறோம் என்றெல்லாம் சுலோக அட்டைகளை ஏந்திக்கொண்டு எவரும் வரவில்லை. என்னோடு கைகுலுக்கிய பலரும் எனக்கு வாழ்த்துக் கூறினர். வரிசை பிடித்து நின்று என்னுடன் கைக் குலுக்கியவர்களில் பலரும் ‘ஐ லவ் யூ’ என்றனர்.

“மக்கள் மகிழ்ச்சியாக உள்ளனர். ஜனநாயகம் மலர்ந்திருப்பது தான் காரணம். பொருத்தமில்லாத, காலத்திற்கு ஒவ்வாத அரசாங்கம் எனக் கருதினால் அவர்களை உங்களது வாக்குகள் மூலம் நீங்கள் வெளியேற்ற முடியும்” என்று அவர் சொன்னார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker