Latestமலேசியா

1எம்டிபி பணத்தை, பலரிடமிருந்து மீட்க அரசு திட்டம்! -லிம்

கோலாலம்பூர், ஜூன்.15- 1எம்டிபி நிறுவனத்தில் இருந்து சட்டத்திற்கு புறம்பான வழிகளில் எடுக்கப்பட்ட பணம் அனைத்தையும் மீட்பதற்கு மலேசியா முயற்சிகளை மேற்கொண்டுள்ளது என்று நிதியமைச்சர் லிம் குவான் எங் தெரிவித்தார்.

மேலும் அத்தைகய வழிகளில் பணம் பெற்ற நிறுவனங்களிடமிருந்து அந்தப் பணத்தை மீட்பதற்கான அடிப்படை இருக்கிறதா? என ஆராயப்படும். குறிப்பாக பிரசித்திபெற்ற வங்கியான கோல்ட்மான் சாக்ஸ் நிறுவனம் 1எம்டிபி உடனான வர்த்தகத் தொடர்புகள் மூலம் பெரும் இலாபம் பெற்றிருக்கிறது என்று சுட்டிக்காட்டப்பட்டது.

முன்னாள் பிரதமர் நஜிப்பினால் பல்வேறு முறைகேடான காரியங்களுக்கு 1எம்டிபி நிதி பயன்படுத்தப்பட்டுள்ளது என்ற குற்றச்சாட்டு நிலவுகிறது. அவ்வாறு முறைகேடாக பெறப்பட்ட பணத்தை தனிநபர்கள் மற்றும் அரசியல் கட்சிகள் ஆகியவற்றிடமிருந்து மீட்பதற்கான திட்டம் தங்களின் பரிசீலனையில் இருக்கிறது என்று லிம் குவான் எங் கூறினார்.

கடந்த 2012-2013 ஆம் ஆண்டுகளில் 650 கோடி ரிங்கிட் திரட்டுவதற்காக அரசாங்க கடன் உத்தரவாத பத்திரங்களின் விற்பனை பணிகளுக்கென நியமிக்கப்பட்ட கோல்ட்மான் சாக்ஸ் நிறுவனம், அதற்கான கட்டணமாக 600 மில்லியன் அமெரிக்க டாலரை பெற்றிருக்கிறது.

வழக்கமாகவே அத்தகைய வங்கிக் கட்டணம் 1 முதல் 2 விழுக்காடாகத்தான் இருக்கும். ஆனால், அதை விட பல மடங்கு கட்டணத்தை அது பெற்றிருப்பத்தால் அதன் அடிப்படையில் அந்தப் பணத்தை மீட்க முடியுமா என்று தாங்கள் ஆராய்ந்து வருவதாக லிம் குவான் எங் கூறினார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker