Latestமலேசியா

உணவகத்தில் ஐவர் கும்பல் அராஜகம்: 3 பேர் கைது!

கோலாலம்பூர், ஜூன்.17 – பப்ளிகா பேரங்காடியிலுள்ள உணவகம் ஒன்றில் ஊழியர் ஒருவரை ஐவர் தாக்கிய சம்பவம் தொடர்பாக சம்பந்தபட்ட ஐவர் மீது போலீசார் விசாரணையைத் தொடக்கியுள்ளனர்.

உணவகத்தின் ரகசிய கண்காணிப்பு கேமிராவில் (CCTV)பதிவாகிய அச்சம்பவம் பின்னர் சமூக ஊடகங்களில் பரவலானதைத் தொடர்ந்து பொதுமக்கள் பலரின் சினத்திற்கு ஆளானது.

“கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணி அளவில் நிகழ்ந்த இச்சம்பவம் குறித்து மற்ற ஊழியர்களிடமிருந்து எனக்கு தொலைபேசி அழைப்பு வந்ததது. நான் விரைந்து அங்கு சென்றபோது அந்த ஐவரும் அங்கிருந்து தப்பித்து விட்டனர்,” என உணவகத்தின் உரிமையாளர் இக்பால் ஹுசேன் முகமட் கனி தெரிவித்தார்.

சேவையின் மீது அதிருப்தி கொண்டதாக அக்கும்பல் சாப்பாட்டுத் தட்டுகளைத் தரையில் போட்டு உடைத்ததோடு ஊழியரைத் தாக்கியது.

ஊழியர் ஒருவர், அந்த ஐவரிடமும் சாப்பிட்ட உணவுக்கானப் பணத்தை செலுத்த கேட்டதைத் தொடர்ந்து அவரைப் போட்டு தாக்கியுள்ளனர் என்றும் அவர் சொன்னார்.

அதோடு, அந்நிய நாட்டவரான அந்த ஊழியருக்கு தலையிலும், முகத்திலும் படுகாயம் ஏற்பட்டது. அச்சம்பவம் குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது. தொடர்ந்து அந்த ஊழியருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதனிடையே, இச்சம்பவம் தொடர்பாக போலீசார் இதுவரை மூவரை கைது செய்துள்ளதாக செந்தூல் மாவட்ட போலீஸ் தலைவர் உதவி ஆணையாளர் ஆர். முனுசாமி கூறினார். இச்சம்பவம் குற்றவியல் சட்ட பிரிவு 323 -இன் கீழ் விசாரணை செய்யப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

 

 

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker