Latestஉலகம்

கனடிய பிரதமருடன் டிரம்ப் சமரசம்! தூற்றியது போதுமா?

ஒட்டாவா, ஜூன்.17- அமெரிக்க அதிபர் டிரம்ப் கனடா பிரதமர் ஜஸ்டின் டுரூடோவை ‘தூற்று தூற்று’ என்று தூற்றித் திரிந்ததை கைவிட்டு விட்டு இப்போது நல்லெண்ண சமாதான பேச்சுக்கான சந்திப்பு ஒன்றை நடத்துவதில் இறங்கியுள்ளார்.

அண்மைய காலமாகவே அதிபர் டிரம்புக்கும் கனடிய பிரதமர் ஜஸ்டின் டுரூடோவுக்கும் இடைய உறவுகள் சீர் குலைந்து போய்விட்டன. ஜஸ்டின் தன் முதுகில் குத்திவிட்டதாக பல இடங்களில் டிரம்ப் பேசிவந்தார். மேலும், “டுரூடோவுக்கு நரகத்தில் ஒரு சிறப்பு இடம் உள்ளது” என்று கடுமையாக டிரம்ப் விமர்சித்துள்ளார்.

இதனிடையே வட கொரியத் தலைவர் கிம் ஜோங் யுன் உடனான சிங்கப்பூர் சந்திப்பு நிகழ்ந்தது. வடகொரியா தலைவரிடம் இருந்து வெற்றிகரமான ஒப்பந்தங்களில் கையெழுத்திட்ட டிரம்ப் இப்போது கனடிய பிரதமரை சமாதான பேச்சுவார்த்தை மூலம் சந்திப்பதில் தனது அடுத்த சவாலாக கருதுகிறார்.

இந்த சமாதான பேச்சு வார்த்தைக்காக கனடாவில் உள்ள பாபின் தீவுகளுக்கு செல்கிறார் டிரம்ப். இந்தச் சந்திப்பு வரலாற்று சிறப்புமிக்க சந்திப்பாக அமையும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

அதிபர் டிரம்ப் மிக க்டுமையாக தமது டுவிட்டர் பக்கத்தில் விமர்சித்த போதெல்லாம் அமைதி காத்த கனடா பிரதமர் டுரூட்டோவுக்கு தற்போது வெற்றி கிடைத்துள்ளது,

ஏனெனில், இந்த சாமாதான பேச்சுவார்த்தை தற்போது கனடாவில் தான் நடைபெறுகிறது. டுரூட்டோ ஆதரவாளர்கள் கூறுகையில், ‘சமாதானம் என்று வந்தால் டிரம்ப் தான் கனடாவில் கால் வைக்க வேண்டும்’ என்று சுட்டிக் காட்டியுள்ளார்.

 

 

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker