Latestமலேசியா

நெல்சன் நாதனைக் கொலை: சசிதரன் மீது குற்றச்சாட்டு!

சிங்கப்பூர், ஜூன்.17- மலேசியாவைச் சேர்ந்த ஆடவர் ஒருவரைக் கொலை செய்ததாக 30 வயதான மலேசிய பிரஜை சசிதரன் ராமசாமி மீது சிங்கப்பூர் நீதிமன்றத்தில் குற்றம்சாட்டப்பட்டது.

கடந்த ஜூன் 15ஆம் தேதி கெய்லாங்கில் காலை 7.47 மணிக்கும் 8.18 மணிக்கும் இடையே   29 வயதான நெல்சன் நாதன் செல்வராஜாவை கொலை செய்ததாக சசிதரன் ராமசாமி மீது குற்றம் சாட்டப்பட்டது.

அவருக்கு எதிரான குற்றப்பத்திரிகை வாசிக்கப்பட்டபோது அவர் அமைதியாகவே காணப்பட்டார். அவர்களுக்கிடையில் என்ன  உறவு என்பது குறித்து அதில் ஏதும் குறிப்பிடப்படவில்லை.

அதோடு, அவ்விருவரும் நண்பர்கள் எனவும் அவர்கள் ஒரே வீட்டில் தங்கியிருந்தனர் என்று சின் மின் தினசரி சீனப்பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.  கொலை செய்யப்பட்ட நெல்சன் நாதனுக்கு தலையில் பலத்த காயங்கள் ஏற்பட்டதாக நம்பப்படுகிறது. இருப்பினும், அவரின் இறப்புக்கு காரணம் இன்னமும் தெரியவில்லை.

குற்றம் சாட்டப்பட்ட சசிதரன் தற்போது சிங்கப்பூர் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். அவருக்கு எதிராக விசாரணை வரும் ஜுன் 22ஆம் தேதி நடைபெறும். சசிதரன் கொலை செய்தது நீதிமன்றத்தில் நிரூபணமானால் அவருக்கு கட்டாய தூக்குத் தண்டனை விதிக்கப்படும்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker