Latestமலேசியா

விளையாட்டு துப்பாக்கி என நினைத்து தாயைச் சுட்ட தனயன்!

குவா மூசாங், ஜூன்.17 – வீட்டின் அலமாரியில் வைக்கப்பட்டிருந்த துப்பாக்கியை, விளையாட்டு துப்பாக்கி என்று நினைத்த மகன், தன் தாயின் தோள்பட்டையில் சுட்டத்தில் அவர் படுகாயமடைந்தார்.

நேற்று காலை 10.30 மணி அளவில் நடந்த அச்சம்பவத்தில் துப்பாக்கிச் சூட்டுக்கு ஆளான 48 வயது நோர் அய்டா மாட் யூசோப்பை போலீஸ் அதிகாரியான அவரது கணவர் உடனடியாக குவா மூசாங் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றார்.

“25 வயதுமிக்க அவரின் மகன் வீட்டின் சமையலறையிலுள்ள தன் தந்தையின் அலமாரி ஒன்றில் துப்பாக்கியைக் கண்டுள்ளார். அதனை விளையாட்டு துப்பாக்கி என்று நினைத்து சுட்டபோது அதிலிருந்த தோட்டா பின்புறம் இருந்த அவரது தாயின் தோள்பட்டையில் பாய்ந்தது,” என்று குவா மூசாங் மாவட்ட போலீஸ் தலைவர் தலைமை கண்காணிப்பாளர் முகமட் தவ்பிக் மைதின் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

தனது தாயார் இடது தோளில் வலிப்பதாக கூறிய பின்னர் ஒரு தோட்டா துளைத்திருப்பதைக் கண்டு மகன் அதிர்ச்சியடைந்ததோடு தன்ந்தந்தையுடன் சேர்ந்து குவா மூசாங் மருத்துவமனைக்கு விரைந்ததாகவும் முகமட் தவ்பிக் கூறினார்.

மேலும், மருத்துவ பரிசோதனையின்போது அவரின் இடது தோள்பகுதி பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்தது. அதைத் தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக கோல கெராய் மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்ட அவர் சீரான நிலையில் உள்ளார். அதோடு, விசாரணைக்காக அவரின் 25 வயது மகனை போலீசார் கைது செய்துள்ளனர்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker