Latestவிளையாட்டு

2034-இல் உலகக் கிண்ண கால்பந்து; மலேசியா ஏற்று நடத்துமா?

குவாந்தான், ஜூன்.17- தென் கிழக்கு ஆசியாவிலுள்ள 4 நாடுகளுடன் இணைந்தால் 2034-ஆம் ஆண்டின் உலகக் கிண்ண கால்பந்து போட்டியை ஏற்று நடத்தும் வகையில் மலேசியாவிற்கு முதன் முறையாக உபசரணை நாடாக விளங்குவதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 2034-ஆம் ஆண்டின் உலக கிண்ண கால்பந்து போட்டியை ஏற்று நடத்துவதற்கு இந்தோனோசியா, தாய்லாந்து, வியட்நாம் போன்ற நாடுகள் ஆர்வம் காட்டி வருகின்றன என அதன் நிர்வாக செயற்குழு உறுப்பினர் துங்கு அப்துல்லா சுல்தான் அகமட் ஷா கூறினார்.

“இவ்விவகாரத்தில் மலேசியாவின் நிலைபாடு என்னவென்று எனக்குத் தெரியாது. ஆனால், உலகத்தின் புகழ்ப் பெற்ற விளையாட்டாக விளங்கும் உலகக் கிண்ண கால்பந்து போட்டியை மலேசியா ஏற்று நடத்துவதற்கு எந்தவிதப் பிரச்சினையும் இருக்காது,” என நேற்று குவாந்தானிலுள்ள அப்துல் அஸிஸ் அரண்மனையில் நடைபெற்ற நோன்பு பெருநாள் பொது உபசரிப்பில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தார்.

அதோடு, மேற்கண்ட நாடுகள் அனைத்தும் ஒன்றாக அப்போட்டியை ஏற்று நடத்த முன்வந்தாலும் பிரச்னை இல்லை எனவும் இதனை முடிவு செய்யும் அதிகாரம் மலேசிய கால்பந்து சங்கத்திற்கும் அரசாங்கத்திற்குமே உள்ளது எனவும் மலேசியா கால்பந்து சங்கத்தின் முன்னாள் தலைவருமான துங்கு அப்துல்லா கருத்துரைத்தார்.

மேலும், மூன்று அல்லது நான்கு நாடுகள் ஒன்றிணைந்து அப்போட்டியை ஏற்று நடத்த முன்வந்தால் ஆசியானுக்கு அதன் வாய்ப்பு பிரகாசமாக இருக்கும். அது மட்டுமல்லாமல், எதிர்வரும் 2026-ஆம் ஆண்டின் உலகக் கிண்ண கால்பந்து போட்டியை ஏற்று நடத்த அமெரிக்கா, கனடா, மெக்ஸிக்கோ போன்ற நாடுகள் முன்வந்துள்ளதையும் அவர் சுட்டிக் காட்டினார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker