Latestமலேசியா

பெற்ற குழந்தையை கழுத்தறுத்துக் கொன்ற தாய்!

மாரான், ஜூன்.18- பெல்டா ஜெங்காவில், தனது ஒரு வயது ஏழே மாத ஆண் குழந்தையை பெண் ஒருத்தி கழுத்தறுத்து கொலை செய்தாள்.

நேற்றிரவு மணி 8.40 அளவில், தன் குழந்தையுடன் அந்த 31 வயது பெண் இருந்திருக்கிறாள். அப்போது என்ன நினைத்தாளோ தெரியவில்லை, குழந்தையின் கழுத்தை கத்தியால் அறுத்திருக்கிறாள்.

இந்த கொடூரக் காட்சியைப் பார்த்த குழந்தையின் தந்தை அந்த பெண்ணை தள்ளிவிட்டு, குழந்தையை ரத்தம் சொட்ட சொட்ட ஜெங்கா மருத்துவமனைக்கு கொண்டு சென்றிருக்கிறார்.

ஆனால், குழந்தை இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்திருக்கின்றனர்.

சம்பந்தப்பட்ட பெண் உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டிருப்பதாக கூறப்பட்டது. எனினும், இதுவரை அதற்கான சிகிச்சை அவள் பெற்றிருக்கவில்லை என கண்டறியப்பட்டுள்ளது. அவள் தற்போது போலீஸ் காவலில் வைக்கப்பட்டிருக்கிறாள்.

குற்றவியல் சட்டம் செக்‌ஷன் 302-இன்படி குற்றம் நிரூபிக்கப்பட்டால் கொலையாளிக்கு மரண தண்டனை விதிக்கப்படலாம்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker