Latestமலேசியா

வீடு வாங்க இலகுவான வங்கிக் கடன்களா? சரியான தீர்வு அல்ல!

கோலாலம்பூர், ஜூன்.18- நாட்டில் சொந்த வீடுகளை வாங்குவோரின் எண்ணிக்கையை அதிகரிக்கும் பட்சத்தில், எளிய வழிகளில் வங்கிக் கடன்கள் வழங்கப்படுவது குறித்து வங்கிகள் ஆலோசித்து வரும் வேளையில், அது சரியான தீர்வல்ல என்று பயனீட்டாளர் அமைப்பு ஒன்று எச்சரித்துள்ளது.

இளைய தலைமுறையினர் சொந்த வீடுகளை வீடுகளை வாங்க வழிவகுக்கும் வகையில் வங்கிக் கடன்களுக்கான அணுகுமுறையில் மாற்றங்கள் நிகழ வேண்டும் என்று அண்மையில் வீடுகள் மற்றும் உள்நாட்டு அரசாங்கத்தின் அமைச்சர் ஜுரைடா கமாரூடின் கூறியிருந்தார்.

நடுத்தர வீடுகளின் விலைகள் அளவுக்கு அதிகமாக உயர்த்தப் பட்டிருப்பதால், மலேசியர்களால் குறிப்பாக இளைஞர்களால் அவற்றை வாங்க முடியவில்லை பேங்க் நெகாரா கருதியுள்ளதாகவும் ஜுரைடா கூறியிருந்தார்.

அதனால், அந்த வீடுகளை வாங்க முயற்சிக்கும் இளைஞர்களுக்கு, எளிய வகையில் வங்கிக் கடன்கள் வழங்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

அவரின் நல்ல எண்ணம் போற்றும் வகையில் அமைந்திருந்தாலும், அது சொந்த வீடுகளை வாங்குவோருக்கு சிரமமாகத் தான் அமையும் என்று வீடுகள் வாங்குவோருக்கான தேசிய அமைப்பின் செயலாளர் சாங் கிம் லூங் கூறினார்.

“வாடிக்கையாளர்களிடமிருந்து முன்பணத்தை பெற்றுக் கொண்டு, அதன் பின்னர் வங்கிக் கடனைக் கொடுத்து, அதன் வாயிலாக வங்கிகள் லாபம் அடைந்து வருகின்றன.

“வங்கிகளின் குறைந்த பட்ச விதிமுறைகளுக்கு கட்டுப் படும் ஒருவருக்கு, வங்கிக் கடன்களை கொடுக்க வங்கிகள் என்றுமே ஆயுத்தமாக உள்ளன” என்று அவர் சொன்னார்.

ஆனால், வங்கிக் கடன்களை பெறுவோரால், அவற்றை முறையாக வங்கிகளுக்கு திரும்ப செலுத்த முடியுமா என்பதை கருத்தில் கொண்டு தான் அந்தக் கடன்களை வங்கிகள் வழங்கின்றன.

வங்கிக் கடன்கள் எளிய வகையில் வழங்கப்பட்டால், அதனைப் பெற்றுக் கொள்பவரால், மாதந்தோரும் பெறப்பட்ட அந்தக் கடனை முறையாக செலுத்த முடியுமா என்பது சந்தேகமே. அதனால், அவருக்கு அதிக சிரமங்கள் ஏற்படலாம் என்று சாங் கிம் லூங் தெரிவித்தார்.

வங்கிக் கடன்களின் விதிமுறைகளால் மலேசியர்கள் சொந்த வீடுகளை வாங்காமல் இல்லை. மாறாக, அந்த வீடுகளை வாங்க முடியாத காரணத்தால் தான் அவர்கள் வீடுகளை வாங்குவதில்லை என்று சொத்து நிபுணர் எர்னஸ்ட் சியோங் கூறினார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker