Latestஇந்தியா

முறைகேடா? சிபிஐ வழக்கை எதிர்த்து ‘ஏர் ஆசியா’ போராடும்!

கோலாலம்பூர், ஜூன்.19- ஏர் ஆசியாவின் வெளிநாட்டுச் சேவைக்கு லைசென்ஸ் வாங்குவதில் முறைகேடு நடந்ததாக ”ஏர் ஆசியா’ நிறுவனம், ஏர் ஆசியா இந்திய நிறுவனம் மற்றும் ஏர் ஆசியாவின் தலைமை செயல்நிலை அதிகாரி ஆகியோர் மீது இந்திய சி.பி.ஐ வழக்கு பதிவு செய்துள்ள வேளையில், சட்டரீதியிலான அனைத்து நடவடிக்கைகளிலும் ஏர் ஆசியா நிறுவனம் ஈடுபடும்.

அந்நிறுவனத்தின் மீதும், ஏர் ஆசியா தலைமை செயல்நிலை அதிகாரி டான்ஶ்ரீ டோனி பெர்னாண்டஸ் மற்றும் அவரின் துணை அதிகாரி லிங்கம் மீதும் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் அடிப்படையற்றவை என்று அந்நிறுவனம் கூறியுள்ளது.

பெயர் குறிப்பிடாத, ‘நம்பகத்தன்மை’ கொண்ட தகவலின் அடிப்படையில், ஏர் ஆசியா நிறுவனத்தின் மீது இந்திய சி.பி.ஐ.  இந்த வழக்கை பதிவு செய்துள்ளதை ஏர் ஆசியா நிறுவனம் சுட்டிக் காட்டியுள்ளது.

“உண்மையற்ற அந்தத் தகவலை சி.பி.ஐயிடம் வழங்கிய அந்த நபரின் நோக்கம் என்னவென்று தெரிந்துக் கொள்ள நாங்கள் விரும்புகிறோம். இருந்த போதிலும், இவ்விவகாரம் தொடர்பிலான விசாரணைக்கு நாங்கள் முழு ஒத்துழைப்பையும் வழங்குவோம்” என்று அந்நிறுவனம் அறிக்கை ஒன்றில் தெரிவித்தது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker