Latestஇந்தியா

அரசியலுக்கு கட்டாயம் வருவேன்! -நடிகர் பார்த்திபன்

சென்னை, ஜூன்.20- “அரசியலுக்கு நான் கட்டாயம் வருவேன் என்று நடிகரும் இயக்குநருமான பார்த்திபன் தெரிவித்துள்ளார். நடிகர்கள் அரசியலுக்கு வருவது ஒன்றும் தமிழ் நாட்டுக்கு புதிது அல்ல.

ஆனால் சில ஆண்டுகளாக அரசியல் பேச்சை எடுத்தாலே
‘நல்ல கேள்வி.., அடுத்த கேள்வி” எனப் பேசிய பல நடிகர்களும் இன்று அரசியல் அவதாரம் எடுத்திருக்கிறார்கள். மக்கள் பெரிதும் எதிர்பார்த்த ரஜினி, தனது அரசியல் பிரவேசத்தை உறுதி செய்துள்ள நிலையில், கமல் கட்சியே தொடங்கி விட்டார்.

இந்நிலையில் இவர்களைத் தொடர்ந்து நடிகர் பார்த்திபனும் அரசியலுக்கு வரவுள்ளதாக தெரிவித்துள்ளார். சென்னையில் பிளாஸ்டிக்
இல்லா கடற்கரை உருவாக்கி கடல் வளத்தை பாதுகாத்திட விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மீனவர்களுக்கான படகுப் போட்டி
நடத்தப்பட்டது.

அந்தப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகள் வழங்கியப் பின் பத்திரிகையாளர்களைச் சந்தித்த பார்த்திபன், ‘நான் அரசியலுக்கு
நிச்சயம் வருவேன். அதற்காக கால அவகாசத்தை எடுத்துக் கொண்டுள்ளேன் என்றார் அவர்.

18 எம்எல்ஏக்கள் வழக்குத் தீர்ப்பு குறித்த கேள்விக்கு பதில் கூறும் அளவிற்கு எனக்கு அரசியல் பற்றி தெரியாது. அதற்காகத் தான் கால
அவகாசம். பிளாஸ்டிக் தடை உத்தரவு என்ற அரசின் ஆணை கூட பிளாஸ்டிக் கவரில் வைத்தே கொடுக்கப்படும் என நினைக்கிறேன் என்று அவர் சொன்னார்.

பிளாஸ்டிக்கிற்கு மாற்று வழி என்ன? என்பதை கண்டறிய வேண்டும்.
மேலும் எஸ். வி.சேகரை இதுவரை கைது செய்யாமல் இருப்பது நீதிமன்றத்தை அவமதிக்கும் செயல் இவ்வாறு பார்த்திபன் கூறியுள்ளார்.

Tags
Show More

Related Articles

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker