Latestமலேசியா

அல்தான் துயா தந்தை போலீஸ் புகார்: மீண்டும் வழக்கு விசாரணை?

கோலாலம்பூர், ஜூன்.20- மங்கோலிய மாடல் அழகி அல்தான் துயா கொலை வழக்கு தொடர்பில், அவரின் தந்தை டாக்டர் ஸெடிப் ஷரீபு இன்று போலீஸ் புகார் செய்ததைத் தொடர்ந்து, அக்கொலைச் சம்பவம் மீண்டும் விசாரணைக்கு உட்படுத்தப்படும் என்று தெரிய வந்துள்ளது.

அச்சம்பவம் தொடர்பில் மீண்டும் விசாரணை செய்யப்பட வேண்டும் என்றும், (முன்பு) பல சாட்சிகள் விசாரிக்கப் படவில்லை
என்பதையும் ஷரீபுவின் வழக்கறிஞரான ராம் கர்ப்பால் சிங் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

“துணை சூப்ரிண்ட். மூசா சாஃப்ரி மிக முக்கிய சாட்சியாவார். இதனை போலீஸ்காரர்கள் முக்கிய குறிப்பாக எடுத்துக் கொள்ள வேண்டும். அவரை இதற்கு முன்னர் ஏன் அரசு தரப்பு வழக்கறிஞர்கள் சாட்சியம் வழங்க அழைக்கவில்லை?” என்று ராம் கர்ப்பால் கேள்வி எழுப்பினார்.

“அல்தான் துயாவின் தந்தை செதீவ் போலீஸ் புகாரை செய்த பின்னர், அவரிடம் விசாரணை மேற்கொள்ளப் படும். அதன் பின்னர், அக்கொலைச் சம்பவம் தொடர்பிலான விசாரணை தொடங்கப்படும்” என்று அவர் சொன்னார்.

இன்று பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட்டை, செதீவ் 5 மணிக்கு சந்திக்கவிருக்கிறார். அவர்களின் சந்திப்பு சுமார் 30 நிமிடங்களுக்கு தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

12 ஆண்டுகளுக்கு முன்னர் தனது மகளை கொலை செய்யுமாறு உத்தரவிட்ட அந்த நபர் யார் என்பதை தெரிந்துக் கொள்வதற்காக தாம் இதுநாள் வரை காத்திருந்ததாக செதீவ் நேற்று செய்தியாளர்களிடம் கூறினார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker