Latestஉலகம்

ஐநா மனித உரிமை ஆணையத்தை விட்டு வெளியேறியது அமெரிக்கா!

நியூயார்க், ஜூன்.20- ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணையத்தில் இருந்து அமெரிக்கா விலகுகிறது என ஐ.நாவுக்கான அமெரிக்கா தூதர் நிக்கி ஹாலே அறிவித்தார்.

ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்க தூதராக இருந்து வருபவர் நிக்கி ஹாலே. இவர் செய்தியாளர்களைச் சந்தித்தப் போது
ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமை ஆணையத்தில் இருந்து அமெரிக்கா விலகுகிறது என அதிகாரப்பூர்வமாக தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், அந்த ஆனையத்தின் அரசியல் சார்பு முரண்பாடு காரணமாகவே அமெரிக்கா இந்த முடிவை எடுத்துள்ளது. கேலிக்குரிய ஒரு பாசாங்குத்தனமான மற்றும் சுய சேவை நிறுவனத்தில் ஒரு பகுதியாக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணையம் செயல்பட்டு வருகிறது.

இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாகவே நாங்கள் இந்த அமைப்பில் இருந்து விலகுவது என்ற நடவடிக்கை எடுத்துள்ளோம் என அவர் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற பின் ஐநாவின் யுனெஸ்கோ அமைப்பில் இருந்து அமெரிக்கா வெளியேறியது.
பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறுவதாக அண்மையில் அறிவித்தது.

ஐநா சபையில் இஸ்ரேலுக்கு எதிராக நிறைவேற்றப்படும் தீர்மானங்களுக்கு அமெரிக்கா கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமை ஆணையம், கடந்த 2006 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பில் 47 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker