Latestமலேசியா

பட்டாசு வெடித்து காயம்பட்ட சிறுமி உயிரிழந்தாள்

கோத்தா திங்கி, ஜூன்.20- பட்டாசு வெடித்து சிதறியதில் கடுமையான தீப்புண் காயங்களுக்கு இலக்கான 7 வயது சிறுமி நான்கு நாள் போராட்டத்திற்கு பிறகு நேற்று முன்தினம் பரிதாபமாக உயிரிழந்தாள்.

நோன்புப் பெருநாள் இரவில் தனது தாத்தா வீட்டு முற்றத்தில் உறவுக்கார பிள்ளைகளுடன் விளையாடிக் கொண்டிருந்தாள் சிறுமி நூர் அக்கீரா காய்பா. அப்போது, திடீரென எங்கிருந்தோ வீசப்பட்ட பட்டாசு வீட்டு முற்றத்தில் வெடித்து சிதறியது. அதன் நெருப்பு தெறித்ததில், அக்கீரா படுகாயமடைந்தார்.

குண்டு வெடித்தது போல் சத்தம் கேட்க வெளியே வந்து பார்த்தபோது தமது மகள் தலையில் இரத்தம் வழிய மயங்கி விழுந்து கிடந்ததாக அக்கீராவின் தந்தை முகமட் சாஹாட் யூசோப் தெரிவித்தார்.

சம்பவம் நிகழ்ந்த அன்று கோத்தா திங்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அக்கீரா பிறகு அங்கிருந்து ஜொகூர் பாருவிலுள்ள சுல்தானா அமீனா மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டாள்.

நான்கு நாள் உயிருக்கு போராடிய அக்கீரா, சிகிச்சை பலனின்றி சுயநினைவு திரும்பாமலே உயிரிழந்தாள். அக்கீராவின் உடல் இன்று காலை பெல்டா பாபான் தீமோர் இஸ்லாமிய மையத்து கொல்லையில் அடக்கம் செய்யப்பட்டது.

இதனிடையே, இச்சம்பவத்திற்கான உண்மை காரணம் இன்னும் ஆராயப்பட்டு வருவதாக போலீஸ் தெரிவித்துள்ளது. இச்சம்பவம் குறித்து தகவல் தெரிந்தால் உடனடியாக தங்களுக்கு தெரிவிக்கும்படியாகவும் போலீஸ் பொது மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker