Latestவிளையாட்டு

உலகக் கிண்ணம்: செனகல்– ஜப்பான் அதிரடி!

மாஸ்கோ, ஜூன் 20 – உலகக் கிண்ண கால்பந்து போட்டியில் தங்களது தொடக்க ஆட்டத்திலேயே செனகல் குழுவும் ஜப்பான் குழுவும் அதிரடி படைத்தன.

நேற்று நடைபெற்ற ‘எச்’ பிரிவு ஆட்டங்களின் போது ஆப்பிரிக்காவைச் சேர்ந்த செனகல், ஐரோப்பாவின் பலம் பொருந்திய குழுவான போலந்தை 2-1 என்ற கோல்கணக்கில் கவிழ்த்தது.

ஆட்டத்தின் 37-ஆவது நிமிடத்தில் செனகல் ஆட்டக்காரர்கள் நடத்திய திடீர்த் தாக்குதலின் போது கோல் முனையில் பந்தைத் தடுக்க முயன்ற போலந்து வீரர் கியோனெக், சொந்த வலைக்குள்ளே பந்தை அடித்து செனகலுக்கு உதவினார்.

தொடர்ந்து பிற்பகுதி ஆட்டத்தின் 60 ஆவது நிமிடத்தில் செனகல் வீரர் நியாங், தனது குழுவின் 2 ஆவது கோலைப் போட்டு 2 –0 இல் முன்னணிக்குக் கொண்டு வந்தார்.

இதன் பின்னர் இடை விடாத தாக்குதல்களை போலந்து நடத்தியது. ஆனால், செனகல் முழு மூச்சாக தற்காப்பில் கவனம் செலுத்தி வெற்றியை நிலைகாட்டியது.

மற்றொரு ஆட்டத்தில் ஜப்பானும் அதிரடி வெற்றியைப் பெற்றது. தென் அமெரிக்கக் குழுவான கொலம்பியாவை 2 – 1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.

ஆட்டம் தொடங்கிய 3 ஆவது நிமிடத்திலேயே கொலம்பியாவின் தற்காப்பு ஆட்டக்காரர் கார்லோஸ் சன்செஸ் நடுவரால் சிவப்பு எச்சரிக்கை அட்டை காட்டப்பட்டு வெளியேற்றப்பட்டதால் 10 பேருடன் அக்குழு விளையாடியது.

இதனைப் பயன்படுத்தி ஜப்பான் 2 -1 என்ற கோல் கணக்கில் அக்குழுவை வீழ்த்தியது. கொலம்பியாவின் இடைவிடாத தாக்குதல் பலவற்றை ஜப்பான், தொடர்ந்து முறியடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே போட்டியை ஏற்று நடத்தும் நாடான ரஷ்யா 3 – 1 என்ற கோல் கணக்கில் எகிப்தை வீழ்ந்தியது. ரஷ்யாவுக்கு இது இரண்டாவது வெற்றியாகும். அதே வேளையில் எகிப்துக்கு இது இரண்டாவது தோல்வி என்பது குறிப்பிடத்தக்கது.

தொடக்க ஆட்டத்தில் ரஷ்யா 5 – 0 இல் சவுதியை வென்றது. அதே வேளையில் எகிப்து முதல் ஆட்டத்தில் உருகுவேயிடம் 1 – 0 என்ற கோல் கணக்கில் தோல்வி கண்டது.

இரண்டு வெற்றிகளினால் ரஷ்யா கிட்டத்தட்ட அடுத்த சுற்றுக்குத் தேர்வு பெறுவது உறுதியாகி இருக்கிறது. ஆனால், இரண்டு தோல்விகளால் எகிப்து சோகத்தில் வீடு திரும்புவது கிட்டத்தட்ட உறுதி ஆகியாகி விட்டது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker