Latestமலேசியா

அல்தான்துயா விசாரணை தொடங்கியது – ஐ ஜிபி

கோலாலம்பூர், ஜூன்.21- பயங்கரமான முறையில் கொல்லப்பட்ட அல்தான்துயா ஷாரிபுவின் கொலை வழக்கை போலீஸ் மீண்டும் விசாரணைக்குத் தொடங்கியுள்ளதாக தேசிய போலீஸ் தலைவர் டான்ஶ்ரீ முகமட் புஸி ஹருண் தெரிவித்தார்.

“பழைய போலீஸ் புகாரின் அடிப்படையிலும், தற்போது டாங் வாஙீ போலீஸ் நிலையத்தில் அளிக்கப்பட்டுள்ள புதிய புகாரை வைத்தும் நாங்கள் விசாரணையைத் தொடங்கியுள்ளோம்” என அவர் குறிப்பிட்டார்.  இந்த விசாரணை முடிந்ததும் அதன் முடிவு அரசு தரப்பு துணை வழக்கறிஞரிடம் சமர்பிக்கப்படும்.

இதனிடையே, நேற்று நண்பகல் மணி 12.03-க்கு அல்தான்துயாவின் தந்தையார் டாக்டர் ஷாரிபு செதெவ் டாங் வாஙீ மாவட்ட போலீஸ் நிலையத்தில் புகார் அளித்ததை கோலாலம்பூர் போலீஸ் துணைத் தலைவர் டத்தோ சைனுடின் யாக்கோப் உறுதிப்படுத்தியுள்ளார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker