Latestவிளையாட்டு

இளம் ரசிகனின் கண்ணீர் துடைத்து கண்கலங்க வைத்த ரொனால்டோ! (VIDEO)

மாஸ்கோ, ஜூன்.21- உலகக் கிண்ணப் போட்டியில் போர்த்துகல் வீரர் கிறிஸ்தியானோ ரொனால்டோ அதிரடி நடத்தி வருகிறார். அவரது மனசு போலவே, அவர் கோலடிப்பதிலும் தாராளம்.  சில தினங்களுக்கு தன்னிடம் ‘ஆட்டோகிராப்’ வாங்கி விடவேண்டும் என்பதற்காக கண்ணீருடன் அலைமோதிய ஒரு சிறுவனை, ரொனால்டோ  கட்டிப்பிடித்து ஆறுதல் கூறி கண்ணீரைத் துடைத்து விட்ட உணர்ச்சிமயமான அந்தக் காட்சி, தற்போது சமூக வலைத் தளங்களில் பெரும் பரபரப்புடன் பரவி வருகிறது.

45 seconds to make a kids day. Ronaldo had already climbed aboard the team bus. Then he must have seen this little guy burst into tears when he heard he had missed his hero. Ronaldo came back out, wiped the tears from his face, took photos and signed his shirt. I love that Ronaldo is not too big for these small but amazing gestures.

Posted by Andre Kritzinger on Saturday, 9 June 2018

கால்பந்து வீரர்களுக்கான அந்த ஆடம்பரப் பஸ்சைச் சுற்றி சுற்றி அலைமோதிக் கொண்டிருந்தான் ஒரு சிறுவன். அவனுடன் அவனது தாயாரும் சிறுவனை பின்தொடர்ந்து ஓடிக்கொண்டிருந்தார்.

எப்படியோ, பாதுகாப்பு வளையத்தை மீறி கால்பந்து வீரர்களுக்கான பஸ் நிற்கும் பகுதிக்குள் அந்தச் சிறுவன் தனது தாயருடன் நுழைந்திருந்தான்.

அவது கண்கள்  கலங்கி இருந்தன. அவனுக்குள் ஒரு படபடப்பு நிலவியது. தான் யாரைத் தேடி வந்தானோ, அந்த கால்பந்து வீரர், அவனது ஹீரோவை நேரில்  சந்திக்கக் கிடைத்த கடைசி வாய்ப்பும் கைநழுவி விட்டதோ என்ற ஏமாற்றம் தான் அவனைக் கண்ணீர் விட வைத்தது.

அங்கு காவல் பணியில் இருந்த போலீஸ்காரரை அணுகி தன்னுடைய ஹீரோ ரொனால்டோவை சந்தித்து ஒரு ஆட்டோகிராப் வாங்கிக் கொள்ள முடியுமா? என்று கேட்டுப் பார்த்தான். போலீஸ்காரர் பஸ்சை நெருங்க விடாமல் விரட்டினார். சிறுவனின் தாயாரும்  கெஞ்சிப் பார்த்தார். போலீஸ்காரர் மசியவேயில்லை.

ஏமாற்றத்தில் தவித்து நின்ற அந்தச் சிறுவனுக்கு ஓர் அதிசயம் காத்திருந்தது.

கறுப்பு கனணாடியைச் சுற்றிலும் போர்த்தியிருந்த அந்த பஸ்சின் கதவு  திறந்தது. அதனுள் இருந்து ஓர் அதிகாரி கீழே இறங்கினார். அவரைத் தொடர்ந்து மற்றொருவர் கீழே இறங்கினார். அவர்தான் அந்தச்  சிறுவனின் ஹீரோ ரொனல்டோ.  திகைத்துப் போனான் சிறுவன்.  பஸ்சிற்கு வெளியே அந்தச் சிறுவன் அலைமோதுவதை பஸ்சினுள் இருந்தவாறு ரொனால்டோ கவனித்து இருக்க வேண்டும்.

7ஆம் நெம்பர் ஜெர்சியை அந்தச் சிறுவன் அணிந்திருந்தான். அது போர்த்துக்கல் அணியின் ஜெர்சி.  புகழ்பெற்ற அந்த 7ஆம் நெம்பர் ஜெர்சிக்கு உரியவர் ரொனால்டோ அல்லவா.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker