Latestமலேசியா

‘கைப்பைகள்- நகைகள் எங்களுக்கு கிடைத்த பரிசுகள்!’ – நஜிப்

லங்காவி, ஜூன்.21- தமது வீட்டிலிருந்து போலீஸ் எடுத்துச் சென்ற கைப்பைகள், நகைகள் போன்ற  உயர்ந்த பொருட்களில் பெரும்பாலானவை தமது துணைவியாருக்கும், மகளுக்கும் கிடைத்த பரிசுப் பொருட்கள் என நஜிப் கூறினார். 1எம்டிபி பணத்துக்கும் அதற்கும் சம்பந்தம் இல்லையென அவர் குறிப்பிட்டார்.

“அதிலும் அந்த பொருட்களின் பல என் மகளுக்கு பரிசாகக் கொடுக்கப்பட்டவை. யார் எப்போது அந்த பரிசுகளை தந்தார்கள் என அவற்றில் குறிப்பிடப்பட்டிருக்கும். அவை என் மகளுக்கு கிடைத்த திருமண அன்பளிப்புகள்” என்று அவர் கூறினார்.

கஸக்ஸ்தான் அதிபர் நூர்சுல்தான் நஸார்பாயேவின் நெருங்கிய உறவினரான தமது மருமகன் டேனியர் நஸார்பாயேவ் ரோஸ்மாவுக்கு பல விலை உயர்ந்த கைப்பைகளை அன்பளிப்பாக வழங்கி இருக்கிறார் என அவர் மேலும் சொன்னார்.

“ஒரு ‘BIRKIN’ கைப்பை இருந்தாலே மக்கள் அதை பெரிதாக நினைக்கிறார்கள். ஆனால், என் மருமகனின் வீட்டில் நிறைய இருக்கின்றன. அவற்றில் சிலவற்றை ரோஸ்மாவுக்கு அவர்கள் தந்தார்கள். கஸக்ஸ்தானில் இருந்து வந்த அந்த கைப்பைகளை 1எம்டிபி பணத்துடன் எப்படித் தொடர்பு படுத்தலாம் சொல்லுங்கள்.

“எங்கள் வீட்டில் இருந்த நகைகளும், பிக்காசோ ஓவியங்களும் அப்படிதான். அவற்றை நாங்கள் பணம் கொடுத்து வாங்கவில்லை. எல்லாமே ரோஸ்மாவுக்கு பரிசாக தரப்பட்டவை. என் கோலாலம்பூர் வீட்டில் இருந்து எடுக்கப்பட்ட  ரிம.114 மில்லியன் ரொக்கப் பணம், அம்னோவுக்கு கிடைத்த நன்கொடை” என அவர்
விவரித்தார்.

லங்காவியில் விடுமுறைக்குச் சென்றிருந்த நஜிப்பிடம் ராய்டர்ஸ் செய்தி நிறுவனம் பேட்டிக் கண்டது. பொதுத் தேர்தலுக்கு பிறகு முதல் முறையாக அவர் அச்செய்தி நிறூவனத்துக்கு பேட்டி அளித்திருக்கிறார். அந்த பேட்டியில், அவர் இவ்விவரங்களை வெளியிட்டார்.

1எம்டிபி விசாரணை தொடங்கப்பட்டதை அடுத்து, நஜிப்பின் வீடுகள் சோதனையிடப்பட்டன. அங்கிருந்து, கைப்பைகள், நகைகள், கைக்கடிகாரங்கள், ரொக்கப் பணம் ஆகியவை நிரம்ப  300 பெட்டிகளை போலீசார் கைது செய்தனர். அவை 1எம்டிபி பணத்தில் வாங்கப்பட்டிருக்கலாம் எனவும் பரவலாகப் பேசப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker