Latestமலேசியா

சொந்த வீடுகளை வாங்க இ.பி.எப். கடன்களா? எம்.டி.யூ.சி. வரவேற்பு!

கோலாலம்பூர், ஜூன்.21- சொந்த வீடுகளை வாங்குவதற்காக வங்கிக் கடன்களை பெறுவதற்கு பதிலாக, தொழிலாளர் சேமநிதி வாரியத்தின் உறுப்பினர்களுக்கு அந்த வாரியமே கடன்களை வழங்கும் புதிய திட்டம் அமல்படுத்த வேண்டும் என்ற பரிந்துரையை மலேசிய தொழிற்சங்க காங்கிரஸ் வரவேற்றுள்ளது.

இவ்வாறான திட்டத்தை இ.பி.எப் அமல்படுத்த வேண்டும் என்று தாங்கள் முந்தைய அரசாங்கத்திடம் பரிந்துரைத்ததாக மலேசிய தொழிற்சங்க காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஜே.சாலமன் கூறினார்.

சொந்த வீடுகளை வாங்க முயற்சிக்கும் பலருக்கு, வங்கிக் கடன்கள் கிடைக்கப் படுவதில்லை. அதனால், எளிய வகையில் வங்கிக் கடன்கள் வழங்கப்பட வேண்டும் என்று புதிய அரசாங்கத்தின் அமைச்சர்கள் சிலர் வலியுறுத்தியுள்ளனர்.

வங்கிகள் எளிய கடன்களை வழங்குவதை காட்டிலும், இ.பி.எப் கடன்கள் வழங்கினால், மக்களின் சிரமம் தீரும் என்ற அடிப்படையில் தேசிய வீடு வாங்குபவர்களின் சங்கம் இந்த பரிந்துரையை முன்வைத்துள்ளது.

மலேசிய தொழிற்சங்க காங்கிரஸின் பரிந்துரைக்கும், தேசிய வீடு வாங்குபவர்களின் சங்கத்தின் பரிந்துரைக்கும் சில வித்தியாசங்கள் இருந்த போதிலும், அவர்களின் நோக்கம் ஒன்று தான் என்று சோலமன் தெரிவித்தார்.

வறுமை கோட்டில் சிக்கித் தவிக்கும் பி40 என்ற வகையைச் சேர்ந்த மக்களுக்கு உதவும் வகையில், அந்தப் பரிந்துரையை தாங்கள் முந்தைய அரசாங்கத்திடம் முன்வைத்ததாக அவர் கூறினார்.

ரிம.300,000-க்கும் குறைவான வீடுகளை வாங்குவதற்காக, வறுமையிலுள்ள பி40 பிரிவிலுள்ள மக்களுக்கும் நடுத்தர பி40 பிரிவு மக்களுக்கு, மலேசிய கட்டட சங்கம் மற்றும் ஆர்.எச்.பி வங்கிகளுக்கு குறிப்பிட்ட விழுக்காடு கடன் தொகையை இ.பி.எப் வழங்க வேண்டும் தாங்கள் பரிந்துரைத்ததாக சாலமன் கூறினார்,

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker