Latestமலேசியா

தடையை நீக்க ஜாகிர் நாயக் மனு; உயர்நீதிமன்றம் தள்ளுபடி

கோலாலம்பூர், ஜூன்.21- மதங்களுக்கு இடையே பகைமையை தூண்டி வருவதாக தம்மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளில் உண்மையில்லை என்றும், அதன் அடிப்படையில் அந்த வழக்குகள் தள்ளுபடி செய்யப் பட வேண்டும் என்ற சர்ச்சைக்குரிய இஸ்லாமிய மத போதகரான ஜாகிர் நாயக்கின் மனுவை மும்பை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

ரத்து செய்யப்பட்டுள்ள தனது பயண கடைப்பிதழை தாம் மீண்டும் உபயோகிக்க அனுமதி வழங்கப்பட வேண்டும் என்றும் ஜாகிர் நாயக் தனது மனுவில் கேட்டுக் கொண்டுள்ளார்.

ஆனால், தேசிய புலனாய்வு முகாம் மற்றும் அமலாக்கத் துறையின் விசாரணைக்கு ஜாகிர் நாயக் ஒத்துழைக்காததால், அவர் நீதிமன்றத்தில் நேரடியாக ஆஜராகும் வரையும், அது குறித்து எவ்வித மாற்றமும் செய்யப்படாது என்று அந்த உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

அதுமட்டுமல்லாது, ஜாகிர் நாயக் மீதான குற்றச்சாட்டுகள் குறித்த அறிக்கையை உடனடியாக தாக்கல் செய்யுமாறு தேசிய புலனாய்வு முகாமிற்கு அந்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வங்காளதேசத்தின் டாக்கா பகுதியில் நடைபெற்ற பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு, ஜாகிர் நாயக் தான் தூண்டுகோலாக செயல்பட்டார் என்று அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. அவரை கண்காணிக்குமாறு, வங்காளதேச அரசு இந்திய அரசை கேட்டுக் கொண்டுள்ளது.

தாம் பயங்கரவாதத்தை தூண்டவில்லை என்றும், தமது பேச்சுக்கு சுதந்திரம் வழங்கப்பட வேண்டும் என்று தலைமறைவாகியுள்ள ஜாகிர் நாயக் கேட்டுக் கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker