Latestமலேசியா

தண்ணீர் பிரச்சனைக்கே முன்னுரிமை! -அமிருடின் ஷாரி

ஷா ஆலாம்,ஜூன்.21- சிலாங்கூரில் நிலவும் தண்ணீர் பிரச்சனையைத் தீர்க்க முன்னுரிமை வழங்கப்படும் என நேற்று புதிய சிலாங்கூர் மந்திரி புசாராக பதிவியேற்ற அமிருடின் ஷாரி கூறினார்.

“சிலாங்கூர் நீரின் மறுசீரமைப்புத் தொடர்பாக விரைவில் முடிவெடுக்கப்படும். மத்திய மற்றும் மாநில அரசாங்கத்தின் ஒத்துழைப்போடு ஜூலை 31-ஆம் தேதிக்குள் இவ்விவகாரத்துக்கு தீர்வு காணப்படும்,” என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

ஒரு வேளை அதற்குள் அப்பிரச்னைக்கு தீர்வு காணப்படவில்லை எனில் நீண்ட காலமாக ஒத்தி வைக்கப்பட்ட ஒரு உறுதியான முடிவு மேற்கொள்ளப்படும் எனவும் அமிருடின் ஷாரி குறிப்பிட்டார்.

அதோடு, பிரதமர் துன் மகாதீர் முகமட்டுடனும் பொருளாதார அமைச்சர் டத்தோஸ்ரீ அஸ்மின் அலியுடனான சந்திப்பில் சிலாங்கூர் தண்ணீர் பிரச்சனை பற்றி முக்கியமாக கலந்தாலோசிக்கப்படும் என்றார் அவர்.

Tags
Show More

Related Articles

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker