Latestமலேசியா

பண அரசியல் இல்லாத எதிர்க்கட்சியாக அம்னோவை ஆக்குவேன்! –கைரி

கோலாலம்பூர், ஜூன். 22- கடந்த பொதுத் தேர்தலில், அம்னோ மற்றும் தேசிய முன்னணி சந்தித்த தோல்வியிலிருந்து மீண்டு வந்து மீண்டும் அம்னோவால் சிறப்பாக செயல்பட முடியுமா என்பதை தெரிந்துக் கொள்ள மக்கள் ஆர்வமாக உள்ளனர் என்று அம்னோ தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிடவிருக்கும் கைய்ரி ஜமாலுடின் கூறினார்.

“அம்னோ தேர்தலில் நான் வெற்றிப் பெற்றால், அம்னோ மீண்டும் ஒரு முறையான, பண அரசியல் கொண்டிராத கட்சியாக செயல்பட முடியும் என்பதை என்னால் நிரூபிக்க முடியும்” என்று அவர் சொன்னார்.

“இப்போதைய அரசாங்கம், மக்களுக்கு ஏதேனும் தவறு இழைத்தால், அதனை தட்டிக் கேட்க தகுதிக் கொண்ட சிறப்பான எதிர்கட்சியாக அம்னோவால் திகழ முடியும்” என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

“பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி தான் இப்போது அரசாங்கமாக செயல்படுகிறது என்பதை தேசிய முன்னணி ஏற்றுக் கொண்டு விட்டது. இனிமேற்கொண்டு, எதிர்கட்சியாக செயல்படவிருக்கும் தேசிய முன்னணி, முறையாக செயல்பட வேண்டும். மக்களும் சிறந்த எதிர்க்கட்சியை தான் எதிர்பார்க்கின்றனர்” என்று அவர் தெரிவித்தார்.

இதனிடையில், பண அரசியலை எவ்வாறு அவரால் ஒடுக்க முடியும் என்ற கேள்விக்கு, அதனை ஒடுக்க அசாதாரண அணுகுமுறை கொண்டு தாம் செயல்பட வேண்டிய அவசியம் உண்டு என்று அவர் குறிப்பிட்டார்.

எதிர்காலத்தில், கட்சி தேர்தல் நடைமுறையை மலேசிய ஊழல் எதிர்ப்பு ஆணையம் கண்காணிக்க வேண்டும் என்ற கட்டாயத்தை தாங்கள் உள்ளடக்கக் கூடும் என்று கைய்ரி சொன்னார்.

Tags
Show More

Related Articles

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker