Latestமலேசியா

புதிய அமைச்சர்கள் யார் : இன்னும் பேச்சுவார்த்தை – துன் மகாதீர்

கோலாலம்பூர், ஜூன்.21- இன்னும் ஒரு வாரத்திற்குள் பிரதமர் அறிவிக்கவிருக்கும் புதிய அமைச்சர்கள், துணையமைச்சர்கள் பட்டியல் முடிவாகிவிட்டதாகவும், நேற்று தொடங்கி சம்பந்தப்பட்ட தலைவர்களுக்கு பிரதமரிடம் இருந்து அழைப்பு வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது. ஆனால், புதிய அமைச்சரவை குறித்து பிரதமருக்கும் சில கட்சிகளுக்கும் இடையே இன்னும் பேச்சு வார்த்தை நீடிப்பதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

குறிப்பாக, பிகேஆரும் ஜசெகவும் தாங்கள் பரிந்துரைத்துள்ள பட்டியல் குறித்து தொடர்ந்து பேச்சு வார்த்தை நடத்துவதாகத் தெரிகிறது.

பிகேஆர் சார்பில், கோல லங்காட் நாடாளுமன்ற உறுப்பினர் சேவியர் ஜெயக்குமார், சுங்கை பூலோ நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.சிவராரா, இந்திரா மாக்கோதா நாடாளுமன்ற உறுப்பினர் சைபுடீன் அப்துல்லா, பண்டார் துன் ரசாக் நாடாளுமன்ற உறுப்பினர் கமாரூடின் ஜாபார் ஆகியோர் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டிருந்தது.

சைபூடின் நசுதியோன், புஸியா சல்லே ஆகியோரின் பெயர் முதலில் இருந்ததாகவும், பின்னர் இன்று காலை 11 மணிக்கு அவர்களின் பெயர் நீக்கப்பட்டுவிட்டதாகவும் தற்போது புதிய தகவல் வெளியாகியுள்ளது.

ஜசெகவின் பட்டியலில் திரேசா கோக், சோங் சியேங் ஜென்னின் பெயர் இன்னும் இருக்கிறது. ஆனால், மற்றவர்களின் நிலை இன்னும் தெரியவில்லை.

இந்நிலையில்,  அமானா கட்சியில் 11 பேர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்கிறார்கள். அவர்களில் குறைந்தது ஐவருக்காவது அமைச்சர், துணையமைச்சர் பதவி கிடைக்கும் என அக்கட்சி தரப்பினர் எதிர்பார்க்கின்றனர்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker