Latestஇந்தியா

யோகா தினம்: உலக சாதனை படைத்தார் பாபா ராம்தேவ்!

கோட்டா, ஜூன் 21 அனைத்துலக யோகா தினத்தை முன்னிட்டு யோகா குரு பாபா ராம்தேவ் தலைமையில் நடந்த யோகா பயிற்சி உலக சாதனை படைத்துள்ளது. ஒன்றரை லட்சம் பேர் இதில் கலந்து கொள்கின்றனர்

நான்காவது அனைத்துலக யோகா தினம் இன்று கடைப் பிடிக்கப் படுகிறது. இந்தியாவில் பல இடங்களில் இதற்காக நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. பிரதமர் நரேந்திரமோடி தலைமையில் டேராடூன் வன ஆராய்ச்சி மையத்தில் நான்காவது அனைத்துலக யோகா தினவிழா கொண்டாட்டம் நடைபெற்றது.

ராஜஸ்தான் மாநிலம் கோட்டா பகுதியில் யோகா குரு பதஞ்சலி பாபா ராமதேவ் தலைமையில் நடந்த யோகா பயிற்சியில் உலக சாதனை படைத்துள்ளது.

ஒரே இடத்தில் ஒரே நேரத்தில் 15 லட்சத்துக்கும் மேற்பட்டோர் ஒன்றிணைந்து யோகா பயிற்சி மேற்கொண்ட இந்த நிகழ்ச்சி உலக கின்னஸ் சாதனை படைத்துள்ளது. இதற்கான சான்றிதழ் மேடையிலேயே வழங்கப்பட்டது.

இது தங்களுக்கு பெருமை தருவதாக ராம்தேவ் கூறினார்.யோகாவில் அதிகமானோர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். யோகா, சூரிய நமஸ்காரம், புஷ்அப்ஸ் ஆகியவற்றை அடிப்படையாக கொண்ட பல்வேறு பிரிவுகளாகும் என்றார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker