Latestமலேசியா

அந்நியத் தொழிலாளர் தற்காலிக வேலை அனுமதி நீட்டிக்கப்படாது

கோலாலம்பூர், ஜூன்.22 – நாட்டில் பத்தாண்டுகளுக்கு தற்காலிகமாக வேலை செய்ய அந்நியத் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட அனுமதி தொடர்ந்து நீட்டிக்கப்படாது. முன்பு, தே.மு அரசின் கீழ் இருந்த உள்துறை அமைச்சு அதற்கு அனுமதி அளித்திருந்தது. சம்பந்தப்பட்ட அனுமதியை தற்போதைய உள்துறை அமைச்சு ரத்து செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இம்மாதம் ஏழாம் தேதி, குடிநுழைவு, அந்நியத் தொழிலாளர்கள் விவகாரம் தொடர்பில் நடத்தப்பட்ட கூட்டத்தில் அம்முடிவு எடுக்கப்பட்டதாக குடிநுழைவு துறையின் அந்நியத் தொழிலாளர்கள் பிரிவின் இயக்குநர் டத்தோ கைருல் கார் யாஹ்யா அறிக்கையின் ஒன்றின் வாயிலாக தெரிவித்தார்.அந்த கூட்டத்திற்கு உள்துறை அமைச்சர் தலைமையேற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதில் சம்பந்தப்பட்ட அந்நியத் தொழிலாளர்களை உடனடியாக அவர்களின் நாடுகளுக்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

நாட்டில் கள்ளக்குடியேறிகளின் பிரச்சனையைக் குறைக்கவும், அந்நியத் தொழிலாளர்களின் எண்ணிக்கையைக் குறைப்பதற்கும் இந்த அதிரடியான முடிவை உள்துறை அமைச்சர் தலைமையிலாக செயற்குழு இம்முடிவை திட்டவட்டமாக எடுத்தது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker