Latestமலேசியா

இந்திராகாந்தி வழக்கு; ஐஜிபியை குலா சந்திப்பதற்கு எதிர்ப்பு!

கோலாலம்பூர், ஜூன்.22- மதமாற்ற வழக்கில் சம்பந்தப்பட்டுள்ள எம்.இந்திரா காந்தியின் விவகாரம் தொடர்பில் மனித வள மைச்சர் குலசேரன் ஐஜிபியை சந்திக்கப் போவதாக கூறியிருப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெண் குழந்தையை இந்திரா காந்தியிடம் ஒப்படைக்க வேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள போதிலும், இதுநாள் வரை அவரின் குழந்தையை, அவரின் முன்னாள் கணவர் அவரிடம் ஒப்படைக்கவில்லை.

அதனால், அந்த முன்னாள் கணவரை போலீஸ் படை விரைவாக தேடும் பொருட்டு, தாம் போலீஸ் படைத் தலைவரை சந்திக்கவிருப்பதாக மனிதவள அமைச்சர் எம்.குலசேகரன் அண்மையில் தெரிவித்திருந்தார்.

ஆனால், தற்போது அமைச்சர் பொறுப்பில் இருக்கும் குலசேகரன், வழக்கறிஞர் பதவியில் நீடித்து இருக்கக்கூடாது என்ற விதிமுறையை சுட்டிக் காட்டி, இனிமேற்கொண்டு இந்திரா காந்தி வழக்கில் குலா தலையிடக் கூடாது என்று வழக்கறிஞர் முகமட் ஹனீப் காத்ரீ அப்துல்லா கூறினார்.

இந்திரா காந்தியின் மூன்று குழந்தைகளின் இஸ்லாம் மதமாற்றம் செய்யப்பட்டு, அவர்களின் பிறப்பு பத்திரங்களில் அவர்களின் பெயர்கள் மாற்றப் பட்டன. தாயாரின் அனுமதி இல்லாமல் அவர்களை மதமாற்றம் செய்த்து தவறு என்று இந்திரா காந்தியின் சார்பில் குலசேகரன் வாதாடினார்.

“இனிமேற்கொண்டு, இந்திரா காந்தி வழக்கில் குலசேகரன் தலையிடக் கூடாது. அவர் வழக்கறிஞராக சேவையாற்ற முடியாது. அவர் இப்போது மனிதவள அமைச்சர். போலீஸ் படை உள்துறை அமைச்சின் கீழ் உள்ளது. போலீஸ் படைத் தலைவரை சந்திக்க வேண்டிய அவசியமும் குலசேகரனுக்கு இல்லை” என்று ஹனீப் காத்ரீ கருத்துரைத்தார்.

அவரது அமைச்சுக்கும், அந்த வழக்கிற்கும் தொடர்பு இல்லை. அவர் எதற்காக அதில் தலையிட வேண்டும் என்று அவர் கேள்வி எழுப்பினார்.

பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி, தாங்கள் அரசாங்கம் நடத்த தேர்வு செய்யப்பட்டால், தங்களது பதவிகளை தவறான நோக்கத்தின் அடிப்படையில் உபயோகிக்க மாட்டோம் என்று வாக்குறுதி அளித்துள்ளனர் என்பதையும் ஹனீப் காத்ரீ சுட்டிக் காட்டினார்.

ஈப்போ பாராட் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற அடிப்படையில், தாம் இந்திரா காந்திக்கு மட்டுமல்லாமல், தமது தொகுதி வாழ் மக்களுக்கு தம்மால் இயன்ற உதவிகளை வழங்கி வருவதாகும், அதன் அடிப்படையில், இந்திரா காந்தி வழக்கு குறித்து தாம் போலீஸ் படைத் தலைவரை சந்திக்கவிருப்பதாக கடந்த வெள்ளியன்று குலசேகரன் செய்தியாளர்களிடம் கூறினார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker