Latestமலேசியா

ஓட்டு போடும் வயதை 18-ஆக குறைக்க மகாதீர் பரிந்துரை

புத்ரா ஜெயா, ஜூன்.22- ஓட்டு போடும் வயதை 18-ஆக குறைக்கலாம் என்ற பிரதமர் துன் மகாதீரின் பரிந்துரையை பக்காத்தான் தலைவர்கள் பலரும் வரவேற்றுள்ளனர். மலேசிய இளைஞர்களின் ஹீரோவாகப் பார்க்கப்படும் துன் மகாதீரின் இந்த பரிந்துரை நிச்சயம் இளையோரின் வரவேற்பையும் பெறும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை எனலாம்.

நடந்து முடிந்த நாட்டின் வரலாற்றுப்பூர்வ பொதுத் தேர்தலில் வாக்களிப்பது மீதான இளையோரின் விழிப்புணர்வை கண்கூடாகப் பார்த்ததனாலேயே இந்த பரிந்துரையை தாம் முன்வைப்பதாக துன் மகாதீர் கூறியுள்ளார்.

இத்தனை ஆண்டுகாலம் யாருமே அசைத்துப் பார்க்க முடியாத கட்சியாக இருந்த தே.முவை தங்களின் ஓட்டுரிமை மூலமாக ஓட ஓட விரட்டிய பெருமை இந்நாட்டு இளைஞர்களையே சேரும் என அவர் பெருமிதத்துடன் சுட்டிக் காட்டியுள்ளார்.

“புலாங் மெஙுண்டி” எனும் இயக்கத்தின் வாயிலாக மூலை முடிச்சில் உள்ளோரையெல்லாம் இந்த பொதுத் தேர்தலில் ஓட்டுப் போடும்படி ஊக்குவித்தவர்களே இந்நாட்டு இளைஞர் படைதான். அதிலிருந்தே எதையும் சிந்தித்து தீர்மானிக்கக் கூடிய ஆற்றல் அவர்களுக்கு இருக்கிறது என்பது தெரிகிறது.

அதனால், ஓட்டு போடும் வயது வரம்பை 21-லிருந்து 18-ஆக குறைப்பதுதான் சரி என தாம் எண்ணுவதாக துன் மகாதீர் தமது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா, தாய்லாந்து, இந்தோனேசியா ஆகிய நாடுகளில்கூட வாக்களிக்க தகுதி பெறும் வயது 18 தான். நமது நாட்டில் மட்டும்தான் 21 வயதை எட்டியவுடன் தான் ஒருவர் ஓட்டு போடும் உரிமையைப் பெறுகிறார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker