Latestஉலகம்

காலி டின்களே கால்களா? சிரிய அகதி சிறுமியின் பரிதாபம்!

அலெப்போ, ஜூன்.22- அபூர்வ நோயால் தனது கால்களை இழந்த இந்த அகதிச் சிறுமி மாயா மெரி (வயது 8) செயற்கைக் கால்கள் வாங்க வசதியில்லாததால் காலி டின்களையே செயற்கை கால்களாக பயன்படுத்தி பள்ளிக்கு செல்லும்நிலை உருவாகி உள்ளது.  தற்போது துருக்கி எல்லையில் உள்ள அகதிகள் முகாமில் வாழ்ந்து வருகிறார்.

அந்தச் சிறுமிக்கு இருக்கும் ஓரே ஆசை தனது தோழிகளுடன் நடப்பதும் விளையாடுவதும் தான் மழை வந்தால் சேறும் சகதியுமாகிவிடும் ஒரு கூடாரத்தில் தான் மாயா மெரியும் அவரது குடும்பத்தினரும் வசிக்கிறார்கள்.

இந்நிலையில் அவருக்கு செயற்கை கால்களை வாங்குவது குறித்து அவர்களால் நினைத்துக்கூட பார்க்க இயலாது. மாயா மெரியின் தந்தை காலிடின்களை கொண்டு செய்து கொடுத்துள்ள செயற்கைக் கால்களின் உதவியுடன் அவர் தினமும் 300 மீட்டர் நடந்து பள்ளிக்கு செல்கிறார். சில நேரங்களில் களைத்து போகும் போது அவள் தனது கைகளை பயன்படுத்தி தவழ்ந்து செல்கிறார்.

இதில் பிரச்சனை என்னவென்றால் அவளது கைகளிலும் பிரச்சனை உள்ளது தான். யாராவது தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் தனக்கு உதவ  மாட்டார்களா…!மீண்டும் நடக்க முடியுமா என மாயா மெரி காத்திருக்கிறார்!!.

Tags
Show More

Related Articles

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker