Latestமலேசியா

சபாநாயகர் பதவிக்கு ரய்ஸ் யாத்திம்?

கோலாலம்பூர், ஜூன்.22- மக்களவை சபாநயகர் பதவிக்கு முன்னாள் அமைச்சர் டான்ஶ்ரீ ரய்ஸ் யாத்திமின் பெயர் பரிசீலிக்கப் படுகிறது. துணை சபாநாயகர் பதவியில் ஹன்னா இயோ அமர்த்தப்படலாம் என்று தெரிய வந்துள்ளது.

எனினும் சபாநாயகர் பதவிக்கான பரிசீலனையில் தமது பெயரும் இடம் பெற்றிருப்பதாக வெளிவந்த செய்தியை பெர்சே இயக்கத்தின் முன்னாள் தலைவரும் வழக்கறிஞருமான டத்தோ அம்பிகா ஶ்ரீனிவாசன் மறுத்திருக்கிறார்.

இதுபற்றி எந்தவொரு இறுதி முடிவும் இதுவரை எடுக்கப்படவில்லை என்றும் குறிப்பாக, சபாநாயகர் பொறுப்புக்கு ரய்ஸ் யாத்திம் பெயர் பரிசிலிக்கப்படுவதாகவும் அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்தன.

இதனிடையே சபாநாயகர் பெயருக்கு தனது பெயர் பரிசீலனையில் இல்லை என்று மனித உரிமை அமைப்பின் தலைவராக இருந்து வரும் அம்பிகா ஶ்ரீனிவாசன் தெளிவு படுத்தி உள்ளார்.

முன்னாள் அம்னோ தலைவர்களில் ஒருவரான ரய்ஸ் யாத்திம் அண்மையில்தான் பிரிபூமி பெர்சத்து கட்சியில் இணைந்தார். அவரை சபாநாயகராக ஆக்கவேண்டும் என்பது பிரதமர் மகாதீரின் விருப்பம் என்று கூறப்பட்டது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker