Latestமலேசியா

சபாநாயகர் பதவி அம்பிகாவுக்கா?

கோலாலம்பூர், ஜுன்.22- ஜூலை மாதம் 16ஆம் தேதி தொடங்கவிருக்கும் நாடாளுமன்றத்தின் சபாநாயகர் பதவிக்கு டத்தோ அம்பிகா ஶ்ரீனிவாசன், ஹன்னா இயோ மற்றும் முன்னாள் அமைச்சர் டான்ஶ்ரீ ரய்ஸ் யத்தீம் ஆகியோரின் பெயர்கள் பரிசீலிக்கப்படுவதாக தகவல்கள் கூறுகின்றன.

எனினும் ,இவர்களில் யாரை சபாநாயகராக தேர்வு செய்வது என்பது குறித்து பக்காத்தான் ஹராப்பான் கட்சிகளிடையே அதிலாரப்பூர்வ கலந்துரையாடல் எதுவும் இதுவரை நடக்கவில்லை என்று கூறப்பட்டது.

முன்னால் பெர்சே 2.0 இயக்கத்தின் தலைவரான அம்பிகா ஶ்ரீனிவாசனுக்கு வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக தெரிகிறது. அவர் ஒரு வழக்கறிஞர் என்ற வகையிலும் அடுத்த சபாநாயகர் ஒரு பெண்மணியாகவும் தேர்தெடுக்கப்படாத பிரதிநிதியாகவும் இருத்தல் நல்லது என்ற கருத்தின் அடிப்படையிலும் அம்பிகாவுக்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது.

அதேவேளையில் ஹன்னா இயோவின் பெயர் தொடக்கத்தில் இருந்த அடிபட்டு வந்தாலும் அவ்ருக்கு துணைசபாநாயகர் பதவியே சாத்தியமானது என்ற கருத்தும் நிலவுகிறது. ஏனெனில் மக்களவை சபாநாயகர் பதவிக்கு அவர் மிகவும் இளையவராக இருப்பதும் ஒரு காரணம் எனத் தெரிய வருகிறது.

சபாநயகர் பதவிக்கு யாரைத் தேர்வு செய்வது என்பது குறித்து கட்சிகள் ரீதியிலோ அல்லது பக்கத்தான் ஹராப்பான் கூட்டணி தலைவர்கள் மன்றத்திலோ இதுவரை விவாதிக்கப்படவில்லை என்று பிகேஆர் கட்சியின் உதவித்தலைவர் தியன் சுவா கருத்துரைத்தார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker