Latestமலேசியா

துன் மகாதீருக்கு பிடித்த ‘பைலட்’ பேனா

புத்ராஜெயா, ஜூன்.22- நேரு பாணியில் கோர்ட் அணிவது துன் மகாதீரின் தனி அடையாளம் என்பது யாவரும் அறிந்ததுதான். ஆனால், அவர் மற்றோர் அடையாளத்திற்கும் பெயர் போனவர் தெரியுமா? அவரை தொடர்ந்து உற்று கவனித்து வந்தால் அது உங்கள் கண்களுக்குப் புலப்படும். ஆம், இடது சட்டைப் பையில் எப்போதும் பேனா சொருகியிருப்பதுதான் அது. பெரும்பாலும் தலைவர்கள் பயன்படுத்தும் விலை உயர்ந்த பேனாவெல்லாம் இல்லை துன் மகாதீர் பயன்படுத்தும் பேனா. அவருக்கு பிடித்தது 4 ரிங்கிட் 30 சென் “பைலட்” பேனாதான்!

“நான் அப்போதிலிருந்து இன்று வரை பயன்படுத்துவது இந்த கறுப்பு நிற பைலட் பேனாவைத்தான். அதிகமானோர் எனக்கு விலை உயர்ந்த பேனாக்களை அன்பளிப்பாக தந்திருக்கின்றனர். ஆனால், அவற்றை நான் பயன்படுத்துவதில்லை” என துன் மகாதீர் கூறியுள்ளார்.

இலகுவாக எழுதுவதற்காக மட்டுமல்ல, இந்த பேனாவுக்கு திரும்ப திரும்ப மை நிரப்பத் தேவையில்லை என்பதாலும் துன் மகாதீருக்கு பைலட் பேனாவைப் பிடிக்குமாம்.

எந்த ஆவணத்தில் கையெழுத்திடுவது என்றாலும் உடனே தமது சட்டைப் பையில் சொருகி இருக்கும் பைலட் பேனாவைத்தான் அவர் பயன்படுத்துகிறார். தாம் அணிந்திருக்கும் உடையில் சட்டைப்பை இல்லையென்றால், சட்டையின் இரு பட்டன்களுக்கிடையே பேனாவைச் சொருகிக் கொள்கிறார் அவர்.

 

அவர் பயன்படுத்தும் பேனா மட்டும் எளிமையானது அல்ல. அவரது கையொப்பம் கூட எளிமையாகத்தான் இருக்கிறது.

“சின்ன வயதிலேயே நான் பிரதமராக வேண்டும் என்று முடிவு செய்து விட்டேன். பிரதமரானால் அதிகமான ஆவணங்களில் கையொப்பம் இட வேண்டியிருக்கும் என அப்போதே சிறியதாக கையொப்பம் இடப் பழகிக்கொண்டேன்” நமது பிரதமர் தெரிவித்துள்ளார்.

Tags
Show More

Related Articles

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker