Latestமலேசியா

நகவெட்டியால் பூட்டைத் திறந்து உணவகத்தில் கொள்ளை ; ஆடவன் கைது

புக்கிட் மெர்தாஜாம், ஜூன்.22 – புக்கிட் தெஙா, ஜாலான் ஐக்கோன் சிட்டியில் உள்ள ஓர் உணவகத்தின் பூட்டை வெறும் நகவெட்டியைக் கொண்டே திறந்து அங்கிருந்த பணப் பெட்டியைக் களவாட முயன்ற ஆடவனை போலீசார் கையும் களவுமாகப் பிடித்தனர்.

அதிகாலை 1.30 மணி அளவில், அந்த ஆடவன் தனது நண்பனோடு சம்பந்தப்பட்ட உணவகத்தினுள் நுழைந்திருக்கிறான். அவர்கள் உணவகத்தில் புகுந்து செய்து கொண்டிருந்த எல்லாவற்றையும் உணவகத்தின் நிர்வாகி தமது கைப்பேசியின் வாயிலாக கவனித்துக் கொண்டிருந்திருக்கிறார்.

உணவகத்தில் பொருத்தப்பட்டிருக்கும் ரகசிய கண்காணிப்பு காமிரா அவரது கைப்பேசியுடன் இணைக்கப்பட்டுள்ளதை அந்த ஆடவர்கள் அறிந்திருக்கவில்லை.

கைப்பேசியில் அந்த காட்சிகளைப் பார்த்த அடுத்த கணமே உணவக நிர்வாகி தமது உணவகத்துக்கு விரைந்திருக்கிறார். அவர் வந்தவுடன் ஒருவன் தப்பித்து ஓடிவிட்டான். மற்றொருவனை பிடித்து உணவக நிர்வாகி போலீசாரிடம் ஒப்படைத்தார்.

அந்த ஆடவனிடமிருந்து பூட்டை உடைக்க பயன்படுத்தப்பட்ட நகவெட்டியையும், அவன் பணப்பெட்டியில் இருந்து திருடிய 200 ரிங்கிட்டையும் போலீசார் கைப்பற்றினர்.

மேல் விசாரணைக்காக ஏழு நாட்களுக்கு தடுத்து வைக்கப்பட்டுள்ள அந்த ஆடவனுக்கு ஏற்கெனவே போதைப்பொருள் தொடர்பான இரு குற்றப்பதிவுகள் இருப்பது தெரிய வந்துள்ளது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker