Latestஉலகம்

நியூசி. பிரதமர் ஜசிந்தாவுக்கு பெண் குழந்தை பிறந்தது!

ஆக்லாந்து,ஜூன் 22- நியூசிலாந்து பிரதமர் ஜசிந்தா ஆர்டெர்ன் – அவரது காதலர் கிளார்க் கேபோர்ட் இத்தம்பதியினருக்கு முதல் பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. உலகில் வயது குறைந்த பெண் பிரதமர்களில் (வயது 37) இவரும் ஒருவர்.

இந்நிலையில் அவர் ஆக்லாந்தில் உள்ள புகழ்பெற்ற ஆர்டர்ன் மருத்துவமனையில் தனது முதல் பிரசவத்திற்காக சேர்க்கப்பட்டார். அவருடன் கிளார்க் கேபோர்ட் உடன் இருந்தார்.

இந்நிலையில், அவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. ஒரு நாட்டின் பிரதமர் பதவியில் இருக்கும் போது குழந்தை பெற்றவர்களில் இவர் இரண்டாவது பெண் பிரதமர் ஆவார். இதற்கு முன்னர் பாகிஸ்தான் பிரதமர் பெனாசிர் புட்டோ பதவியில் இருக்கும் போது குழந்தைகளைப் பெற்றார்.

பிரசவத்திற்குபின், பலரின் அன்புக்கும்- வாழ்த்துக்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டார் பிரதமர் ஆர்டெர்ன். தாயும் சேயும் நலமாக உள்ளதாக அனைவருக்கும் தெரிவித்துள்ளார்.

இதைத் தொடர்ந்து 6 வாரங்களுக்கு மருத்துவ விடுப்பில் செல்வதாக தெரிவித்துள்ளார். துணைப் பிரதமரான வின்ஸ்டன் பீட்டர்ஸ் இடைக்கால பிரதமராக இருப்பார் என அறிவிக்கப்பட்டது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker