Latestவிளையாட்டு

பிரான்ஸ் அதிரடி: அடுத்த சுற்றுக்கு தகுதி!

மாஸ்கோ, ஜூன்.22- உலகக் கிண்ண கால்பந்து போட்டியின் ‘சி’ பிரிவு ஆட்டத்தில் பிரான்ஸ் குழு, தென் அமெரிக்கக் குழுவான பெருவை 1-0 என்ற கோல்கணக்கில் வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு தேர்வு பெற்றுள்ளது.

தொடக்க ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை 2-1 என்ற கோல்கணக்கில் பிரான்ஸ் வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்று நடந்த ஆட்டத்தில் பிரான்ஸின் இளம் ஆட்டக்காரரான கய்லியான் எம்பாப்பே 34ஆவது நிமிடத்தில் ஒரு கோலைப் புகுத்தினார். எனினும், தொடர்ந்து அடுத்தடுத்து கோல்களை அடிக்க பிரான்ஸ் மேற்கண்ட முயற்சிகள் தோல்வியில் முடிந்தன.

ஏற்கெனவே டென்மார்க்கிடம் 1-0 இல் தோல்வி கண்டுள்ள பெருவுக்கு இது வாழ்வா, சாவா? என்கிற போராட்டமாக அமைந்தது. ஆட்டத்தை சமன்படுத்த அது போராடியது.

எனினும், கடைசி வரை அதன் முயற்சி பலிக்கவில்லை. உலகக் கிண்ணப் போட்டியின் முதல் சுற்றிலேயே பெரு குழு வீடு திரும்ப நேர்ந்துள்ளது. ‘சி’ பிரிவிலிருந்து பிரான்ஸை அடுத்து டென்மார்க் அடுத்த சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பை பெற்றுள்ளது.

Tags
Show More

Related Articles

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker