Latestமலேசியா

8 வயது சிறுமியை கற்பழிக்க முயன்ற 70 வயது முதியவன் கைது!

கூச்சிங், ஜூன்.22 – சரவாக், மீரியில் உள்ள நீண்ட வீடு ஒன்றில் 8 வயது சிறுமியை கற்பழிக்க முயன்ற 70 வயது முதியவன் கைது செய்யப்பட்டான்.

அம்முதியவன் சிறுமியை காட்டிற்கு அழைத்துச் சென்று அவளது ஆடைகளைக் களைந்து கொண்டிருந்தபோது யாரோ அந்த பக்கமாக வருவதை உணர்ந்ததும், அவன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டதாக தெரிவிக்கப்பட்டது.

“சந்தேக நபர் 8 வயது சிறுமியின் ஆடைகளைக் களையும் முன்னர் சிறுமியை ஒரு அலமாரியில் அவன் கட்டிப் போட்டிருக்கிறான். சிறுமி பயத்தில் அழத் தொடங்கியிருக்கிறாள். அதனால், சிறுமியின் வாயை கை வைத்து மூடியிருக்கிறான்” என தொடக்க கட்ட விசாரணையில் தெரியவந்ததாக
மாருடி மாவட்ட போலீஸ் தலைவர் ஓசிபிடி கேப்ரியல் ரிசுட் தெரிவித்தார்.

அந்த முதியவனுக்கு எதிராக கிடைத்த புகாரை அடுத்து கடந்த செவ்வாய்கிழமை மதியம் 3.40 மணி அளவில் போலீஸ் அம்முதியவனை உடனடியாக கைது செய்ததது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker